அணுஆயுத போர் வெடிக்கும் அபாயம்...!! குலை நடுங்கும் 28 நாடுகள்... ஈராக்கை தணிக்கும் வழி குறித்து அவரச ஆலோசனை...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2020, 3:41 PM IST
Highlights

 கடந்த  2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து  செய்வதாக  ஈரான்  அறிவித்தது குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

ஈரான் படைத்தளபதி அமெரிக்க படைகளால்  கொல்லப்பட்டு அதனால்  ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து  28 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.  இது பிரான்ஸ் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடேபெற்றுள்ளது.   அமெரிக்கா ஈரான் இடையே போர்  மேகம் சூழ்ந்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த அதில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.   கடந்த  2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து  செய்வதாக  ஈரான்  அறிவித்தது குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

கடந்த வாரம்  ஈராக் தலைநகர்  பாக்தாத் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானம் மூலம்  அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில்  ஈரான் நாட்டு ராணுவ படைதளபதி  ஜெனரல் காசிம்  சுலைமானி படுகொலை செய்யப்பட்டார் ,  இந்நிலையில் ஈரான் அமெரிக்கா இடையே சண்டை தொடங்கியது .  இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க படைகள்மீது  ஈரான் தாக்கத் தொடங்கியுள்ளது .  

அமெரிக்காவின் al-azhar விமானதளம் மூதும்  ஈரான் 12 ராக்கெட்களை  ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது .  சுலைமானி படுகொலைக்காக அமெரிக்காவை  ஈரான்  கடுமையாக எச்சரித்ததுடன்,  அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது .  அத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு போடப்பட்ட  அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும்  இனி அந்த ஒப்பந்தம் ஈரானை கட்டுப்படுத்தாது எனவும் ஈராக் அறிவித்தது. 

அத்துடன் ,   யுரேனியம் செறிவூட்டலை  அதிகரிக்கப் போவதாகவும் ஈரான் அறிவித்தது இது  அணு ஆயுதப் போர்  ஏற்பட வழிவகுத்து விடும் என்ற ஆபத்து உள்ளதால் இந்த ஆலோசனைக் கூட்டம் அவசரமாக  நடத்தப்பட்டுள்ளது .   இதில் அமெரிக்கா , ரஷ்யா ,  பிரிட்டன் ,  பிரான்ஸ் ,  ஜெர்மனி ,  உள்ளிட்ட 28 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் .  அப்போது ஈரானின் அத்துமீறலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .  தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான  நிலையை தணிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும்  பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஜூன் வைஸ் டிரயன் தெரிவித்துள்ளார் . 
 

click me!