கோடையில் வெப்பத் தாக்கம் நீரிழப்பை ஏற்படுத்தும். இந்நேரத்தில் 90% வரை தண்ணீர்ச்சத்து கொண்ட தர்பூசணியை உண்பது நல்லது.
தர்பூசணியை தினமும் சாப்பிட்டால் வெயிலுக்கு நீரிழப்பினால் ஏற்படும் தலைச்சுற்றல் அல்லது பலவீனம் குறைகிறது.
வயிற்றில் வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல், செரிமானக் கோளாறு வராது. உடலை குளிர்ச்சியாக வைக்கும்.
தர்பூசணியின் முழுநன்மையை பெற எந்த நேரத்தில் அதனை சாப்பிட வேண்டும் என மக்களிடையே பெரிய கேள்வி உள்ளது.
காலை உணவாக தர்பூசணி சாப்பிடலாம். வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
மதிய உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவும் தர்பூசணி உண்ணலாம். செரிமான அமைப்பை மேம்படுத்தும்.
கோடையில் உடற்பயிற்சி செய்யும்போது நீரிழப்பு வரலாம். அதை சரிசெய்ய தர்பூசணி உண்ணலாம்.
தர்பூசணியில் உள்ள அதிக தண்ணீர் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தூண்டும். அதனால் இரவில் தவிர்க்கலாம்.
உணவுக்கு பின் உடனே தர்பூசணி சாப்பிட்டால் வாயு, செரிமான பிரச்சனைகள் ஏற்படும். ஃபிரிட்ஜில் இருந்து எடுத்ததும் உண்ணக் கூடாது.
எடை குறைக்க மதியவேளையில் தர்பூசணி சாப்பிடலாம். அதிக நார்ச்சத்து உள்ளதால் வயிறு நீண்ட நேரம் நிரம்ப உணர்வு வரும்.
தர்பூசணியை மாம்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சைகளுடன் உண்ணக் கூடாது.