health
கிட்டத்தட்ட எல்லா இந்திய வீடுகளிலும் கண்டிப்பாக இந்த செடி இருக்கும். துளசி இலை பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றது.
துளசி இலை போட்டு ஆவி பிடித்தால் பருவ கால தொற்று நோய்கள் தடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் பிற நன்மைகள் உள்ளே..
துளசி இலை போட்டு ஆவி பிடித்தால் சளி நீங்கும், தொண்டை புண் குணமாகும். துளசி இலையில் பலவகையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
காய்ச்சல் இருக்கும் போது துளசி இலை போட்டு ஆவி பிடித்தால் துளசியில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காய்ச்சலை குறைக்கும்.
துளசி இலை ஆவி பிடிப்பது மட்டுமல்லாமல், துளசி டீ குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்.
நீண்டகால சளி மற்றும் இருமலால் அவதிப்படுகிறீர்கள் என்றால், துளசி இலை போட்டு ஆவி பிடியுங்கள்.
துளசி இலை போட்டு ஆவி பிடித்தால் பருக்கள் மற்றும் சுருக்கங்கள் குறையும். கூடுதலாக பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால் துளசி இலை போட்டு ஆவி பிடித்தால் மிகவும் நன்மை.