காலையில் மெல்ல நடந்தால் தசைகளை செயல்படுத்துகிறது. கீழ் உடல் தசைகளை வலுவாக்கும்.
மெதுவாக நடப்பதால் மூளை உள்பட உடலின் அனைத்து பாகத்திற்கும் இரத்த ஓட்டத்தை மேம்படும். கழிவுப்பொருட்களை நீக்கும்.
மெதுவாக நடப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் காலை உணவுக்கு பின் நடப்பது நல்லது.
காலையில் வீசும் காற்று தூய்மையாகவும் இருப்பதால் நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற உதவும். காலை நடை சுவாசப் பயிற்சியாக இருக்கும்.
மனத்தெளிவு, புத்துணர்ச்சியை கொடுப்பதால் மன அழுத்தம் குறையும். நாள் முழுக்க நேர்மறையாக அமையும்.
மெதுவாக நடப்பது மூட்டுகளை உயவூட்டி விறைப்பைக் குறைக்கும். கீல்வாதம், மூட்டு வலி இருப்பவர்களுக்கு ஏற்ற பயிற்சி.
மெதுவாக நடப்பது படிப்படியாக கொழுப்பைக் கரைத்து எடை இழப்பை ஆதரிக்கிறது. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
உடலில் சூரிய ஒளியை படுமாறு நடப்பது சர்க்காடியன் தாளத்தை சீராக்க உதவும். இதனால் இரவில் நல்ல தூக்கம் வரும்.
எழுந்ததும் அல்லது காலை உணவுக்கு பின் நடப்பது செரிமானத்தை தூண்டும். வீக்கம், மலச்சிக்கல், அமில ரிஃப்ளக்ஸ் குறைய உதவும்.
தினமும் நடப்பதை பழக்கப்படுத்தினால் மறைமுகமாக உங்கள் ஆயுளை நீட்டிக்கிறீர்கள் என அர்த்தம். இது நாள்பட்ட நோய்களை கட்டுப்படுத்த சிறந்த பயிற்சி.
தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்!
முகம் அழகில் பளபளக்க உண்ண வேண்டிய பழங்கள் இவைதான்!!
மாதவிடாய் வலி குறைய சூப்பரான உணவு இதுதான்!!
எடையை குறைக்க எலுமிச்சை நீர் எவ்வாறு உதவுகிறது?