cinema
இந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவுக்கு வந்த 'எதிர்நீச்சல்' சீரியலின் இரண்டாம் பாகம் இன்னும் சில வாரங்களில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம், 2022 ஜனவரியில் தொடங்கி 2 வருடங்கள் ஓடியது.
கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதல் பாகம் முடிவுக்கு வந்த நிலையில், இதன் இரண்டாவது அக்டோபர் 2023-ல் துவங்கப்பட்டு தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி முதல் பாகம் முடிவடைந்த பின்னர் 2013 முதல் 2016 வரை மூன்று ஆண்டுகள் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடியது.
சன் டிவியில் 2021-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடரின் முதல் பாகம், 2023-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததது. அதன் தொடர்ச்சியாக ஒளிபரப்பாக சுந்தரி 2 சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் 2-ஆம் பாகம் உருவானது. 2020 முதல் 2022 வரை இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2022-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரின் முதல் பாகம் நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று மௌனராகம் 2. கடந்த 2021-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் 2023 மார்ச்சு மாதம் முடிவுக்கு வந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ரோஜா சீரியலின் இரண்டாவது பாகம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதுகுறித்த புரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.