cinema
மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே.
தமிழில் பூஜா நடித்த இரண்டாவது படமே பீஸ்ட். அதில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
தமிழில் இதுவரை பூஜா ஹெக்டே நடித்த இரண்டு படமும் பிளாப் ஆனாலும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகிறது.
தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார் பூஜா. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.
ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 படத்திலும் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் பூஜா.
பிசியாக நடித்தாலும் விதவிதமாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் பூஜா ஹெக்டே.
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து பூஜா ஹெக்டே நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.