Exclusive : ஹிப்ஹாப் ஆதி பாணியில் ராப் இசையில் கலக்கும் தமிழன்... எழில் குமரனின் எக்ஸ்குளூசிவ் நேர்காணல்

Jun 17, 2024, 11:00 AM IST

சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு சமீப காலமாக நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகிறது. குறிப்பாக சுயாதீன இசைக்கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஹிப்ஹாப் ஆதி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். கோலிவுட்டில் ஹிப்ஹாப் பாடல்களை பிரபலமாக்கியவர்களில் ஹிப்ஹாப் ஆதியும் ஒருவர்.

இதேபோல் மலேசியாவை சேர்ந்த ஹிப்ஹாப் பாடகரான யோகிபியும் தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இவ்வாறு தமிழ்நாட்டில் தற்போது ஹிப்ஹாப் பாடல்களுக்கு என தனி மவுசு இருந்து வருகிறது. இந்த நிலையில் யோகிபி, ஹிப்ஹாப் ஆதி வரிசையில் தற்போது படிப்படியாக பேமஸ் ஆகி வருபவர் தான் எழில் குமரன்.

ராப் பாடகரான இவர் பல்வேறு சுயாதீன இசை பாடல்களை பாடி இருக்கிறார். அவரது பாடல்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், நம்முடைய ஏசியாநெட் தமிழ் யூடியூப் சேனலுக்கு ராப் பாடகர் எழில் குமரன் பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய இசைப்பயணம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.