வனத்துறையினரிடம் சிக்காமல் தண்ணீ காட்டி வந்த புலி 26 நாட்களுக்கு பிறகு பிடிப்பட்டது..

Oct 28, 2022, 12:51 PM IST

வயநாடு வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வழி தவறிய ஊருக்கு புகுந்த புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். 12 வயதாகும் ஆண் புலி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4,30 மணியளவில் குடியிருப்புக்குள் நுழைந்த போது வனத்துறையினர் வைத்திருந்த வலையில் சிக்கியது. 

மேலும் படிக்க:பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்..? வெளியான முக்கிய தகவல்..

இந்த நிலையில் பிடிப்பட்ட புலியை பரிசோதித்த மருத்துவ குழுவினர், புலி அதன் கோரை பற்களை இழந்துள்ளதாக தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாநில வனத்துறை அமைச்சர் சுசீந்திரன், புலி பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பாராட்டினார். 

மேலும் படிக்க:பணத்துக்காக வாடகைத் தாயாக மாறும் சமந்தா... surrogacy முறையில் நடக்கும் மோசடிகளை தோலுரிக்கும் யசோதா டிரைலர் இதோ

மேலும் புலி தாக்குதால் கால்நடைகளாஇ இழந்த விவசாயிகளுக்கு உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.