கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தமிழ்நாட்டின் துளசேந்திர மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ளதாக கூறப்பட்டது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இந்த சூழலில் அதிபர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் ஜோ பைடன் அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜோ பைடன் கூறியிருந்தார். இதனால் அமெரிக்க கமலா ஹாரிஸ் இந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கோபாலன் என்பவரின் மகள் வழி பேத்தி தான் கமலா ஹாரிஸ். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று துளசேந்திர மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பழமையான தர்ம சாஸ்தா கோயிலில் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டனர்.
US Election | வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு குவியும் நன்கொடை! ஒரே நாளில் குவிந்த 677.6 கோடி!
தர்ம சாஸ்தா கோவில் பூசாரி நடராஜன் இதுகுறித்து பேசிய போது. "இங்குள்ள மக்கள் அவரது வெற்றிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், அவர் வெற்றி பெற்றவுடன், அவர் இந்த கிராமத்திற்கு வர வேண்டும்," என்று கூறினார்.
இந்தியா உடனான தனது தொடர்பு குறித்து கமலா ஹாரிஸ் பல முறை பேசி உள்ளார். இந்தியாவிலும் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் என்னை மட்டும் பாதிக்கவில்லை, அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன" என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். இந்தியாவை தனது வாழ்க்கையின் "மிக முக்கியமான" பகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பிறகு உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர் ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் ஹாரிஸை சந்தித்தார், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ; நம்ம மோடி ஜியும் இருக்காரு பாருங்க!!
எனினும் கமலா ஹாரிஸுக்கு 7 வயதாக இருக்கும் போதே அவரின் பெற்றோர் விவாகரத்து செய்து விட்டனர். பின்னர் ஷியாமா தனது இரண்டு மகள்களையும் தனியாகவே வளர்த்து வந்தார். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த கமலா ஹாரிஸ் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்,
பின்னர் சட்டப்படிப்பை படித்த அவர் 1990-ம் ஆண்டு கலிபோர்னியாவில் துணை மாவட்ட வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். 2017-ல் தனது மாகாணத்தில் அமெரிக்க செனட்டராக ஆனார் கமலா ஹாரிஸ்.
செனட்டில் பணியாற்றும் இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் முதல் தென்கிழக்கு ஆசியப் பெண்மணி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றார் 2020 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அமெரிக்காவின் துணை அதிபரானார்.
இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க உள்ள கமலா ஹாரிஸின் வேட்பு மனு ஏற்கப்பட்டால், அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பெறுவார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும், முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது..