பாலியல் வழக்கில் கைதான சிவராமனின் தந்தையும் உயிரிழப்பு! காரணம் என்ன?

By vinoth kumar  |  First Published Aug 23, 2024, 8:53 AM IST

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி பயிற்சியாளர் சிவராமன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதை சம்பவத்தை மறைக்க முயன்ற பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த நாதக முன்னாள் நிர்வாகி திடீர் உயிரிழப்பு! நடந்தது என்ன?

Tap to resize

Latest Videos

இந்நிலையில் பாலியல் வழக்கில் மகன் போக்சோ சட்டத்தில் கைதானதால் அவமானம் மற்றும் மன உளைச்சலில் தந்தை அசோக் குமார் இருந்துள்ளார். காவேரிப்பட்டணம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி அசோக் குமார் நேற்று இரவு உயிரிழந்தார்.

இதையும் படிங்க:  Power Shutdown: வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க.. இன்று சென்னையில் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? 

இதனிடையே  கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து அவர் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவராமன் இன்று காலை உயிரிழந்தார். நேற்று தந்தையும், இன்று மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!