ஷாக்கிங் நியூஸ்! பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த நாதக முன்னாள் நிர்வாகி திடீர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
School Girl Rape
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
Police Arrest
மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Power Shutdown: வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க.. இன்று சென்னையில் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
Culprit sivaraman death
இதனிடையே கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து அவர் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிவராமன் உயிரிழந்தார். பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.