543 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்கான முன்னெற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் உலகிலேயே மிக உயரமான சேலம் ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியும், 2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதியும், 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதியும், 4ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25ம் தேதியும், 7ம் கட்ட இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது. 543 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்கான முன்னெற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Lok Sabha Election 2024: கடவுளே.. 3வது முறையாக மோடி பிரதமராகனும்.. முருகனிடம் மனமுருகி வேண்டிய எஸ்.ஜி. சூர்யா!
இந்நிலையில், நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதால் கோவில் கோவிலாக சென்று வருகின்றனர்.
அதன்படி உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட சேலம் ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பின் தியான மைய இடத்தில் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதையும் படிங்க: கட்சியவே கலைச்சிட்டேன் என் மனைவி எப்படியாவது எம்.பி. ஆயிடனும்; நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம்