DMK in Coimbatore Loksabha Election : மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பிரச்சார பணிகளுக்கு தயாராகி வருகின்றன.
இந்த சூழலில் கோவை தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளதாக அறிவித்திருக்கிறது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பின்னர் கோவையை நிச்சயம் கைப்பற்றியே தீர வேண்டும் என்கின்ற முடிவோடு திமுக களமிறங்குவதாக கூறப்படுகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக இறுதியாக கோவையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 28 ஆண்டுகளாக கோவையில் வெற்றியை சுவைக்காத திமுக தற்பொழுது கோவை தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கின்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இன்று திங்கட்கிழமை மார்ச் 18ஆம் தேதி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகளை முடித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அது தவிர 17 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட உள்ளது.
தேனியைக் குறிவைக்கும் டிடிவி தினகரன்! முடிஞ்சா ஜெயிச்சு பாருங்க என சவால் விடும் முன்னாள் நண்பர்!
கோவையும் திராவிட முன்னேற்றக் கழகமும்
தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிற்கே ஒரு குட்டி மான்செஸ்டராக திகழ்ந்துவரும் நகரம் தான் கோவை. மக்களவைத் தேர்தல் என்று வரும்பொழுது பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டசபை தொகுதிகளை கொண்ட ஒரு வலுவான இடமாக அது மாறுகிறது.
கோவை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளன. அதேபோல காங்கிரஸ் மூன்று முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக ஒரு முறை இங்கு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1980 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்த போது திமுகவை சேர்ந்த மோகன் என்பவர் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகள் கழித்து 1996 ஆம் ஆண்டு தான் திமுகவை சேர்ந்த ராமநாதன் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1999, 2004, 2009 மாற்றும் 2014 உள்ளிட்ட தேர்தல்களில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இருந்து சொற்ப வாக்கு வித்தியாசம் வரை திமுகவிற்கு தோல்வியே மிஞ்சியது.
இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் சிபிஎம் கட்சி வெற்றி பெற, பாஜக படுதோல்வி அடைந்தது. உலக நாயகனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சுமார் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுக தனது வெற்றியை ருசிக்குமா என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
பாமக பாஜகவுடன் கூட்டணி! இன்று இரவு ராமதாஸ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்