BJP Leader Agoram Arrested : ஆபாச வீடியோ விவகாரம் ஒன்றில் தருமபுரம் ஆதீனம் அவர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், தலைமறைவாக இருந்த பாஜக தலைவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதீனம் இருக்கின்றது. இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருந்து வருகிறார் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். மகா சிவராத்திரியை முன்னிட்டு காசிக்கு சென்று புனித நீராடி விட்டு தற்பொழுது அவர் மயிலாடுதுறை திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆபாச வீடியோ வழக்கு
இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்னதாக தர்மபுரம் ஆதீனத்தின் சகோதரரும் தர்மபுரி ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளருமான விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீசாரிடம் ஒரு திடுக்கிடும் புகாரை அளித்தார். அதில் தங்களது மடாதிபதி தொடர்பான ஆபாச வீடியோ ஒன்றும், அது தொடர்பான ஆடியோ ஒன்றும் தங்கள் வசம் இருப்பதாகவும்.
காசிக்கு சென்று திரும்பிய தருமபுரம் ஆதீன மடாதிபதி.. மயிலாடுதுறையில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
அதை பொதுவெளியிலும், பத்திரிகையிலும் வெளியிடாமல் இருக்க பெரும் தொகை தர வேண்டும் என்று சிலர் மிரட்டுவதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி. இதைத்தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த மயிலாடுதுறை போலீசார். முதற்கட்டமாக தஞ்சை மாவட்ட வடக்கு பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத் மற்றும் சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தலைமை குற்றவாளி கைது
மேலும் இந்த வழக்கில் குடியரசு மற்றும் ஸ்ரீநிவாஸ் என்கின்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் பல நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த தமிழக பாஜக தலைவர் அகோரம் தற்பொழுது மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் தலைமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தவர் அகோரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மும்பையில் இருந்து அவரை தமிழகம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு: இபிஎஸ்சுக்கு எதிராக அமைய வாய்ப்பு?