ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் 20ம் தேதி தொடங்கும் நிலையில், லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா மற்றும் நடப்பு சாம்பியன் ஃப்ரான்ஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழா கால்பந்து உலக கோப்பை. சர்வதேச அளவில் கிரிக்கெட்டை விட அதிகளவிலான ரசிகர்களை பெற்ற விளையாட்டு கால்பந்து தான். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
32 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் 4 அணிகள் என பிரித்து அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
undefined
குரூப் ஏ - கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து
குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் சி - அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ
குரூப் டி - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
FIFA World Cup: தங்களது கடைசி உலக கோப்பையை ஆடும் 5 லெஜண்ட் கால்பந்து வீரர்கள்
குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா
குரூப் ஜி - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
குரூப் ஹெச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா
ஃபிஃபா உலக கோப்பைக்கான நடப்பு சாம்பியன் ஃப்ரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா அணிகள் இடம்பெற்றுள்ள டி பிரிவில் ஃப்ரான்ஸ் அணி இடம்பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை வென்ற ஃப்ரான்ஸ் அணி இந்த முறையும் வென்றால், தொடர்ச்சியாக 2 முறை உலக கோப்பையை வென்ற 3வது அணி என்ற பெருமையை பெறும்.
ஃபிஃபா உலக கோப்பைக்கான ஃப்ரான்ஸ் அணி:
கோல் கீப்பர்கள்:
அல்ஃபோன் அரோலா, ஹூகோ லோரிஸ், ஸ்டீவ் மண்டாண்டா.
தடுப்பாட்டக்காரர்கள்:
லுகாஸ் ஹெர்னாண்டஸ், தியோ ஹெர்னாண்டஸ், ப்ரெஸ்னெல் கிம்பெம்பே, இப்ராஹிமா கோனெட், ஜூல்ஸ் கொண்டே, பெஞ்சமின் பவார்ட், வில்லியம் சலிபா, டயோட் உபாமிகானோ, ரஃபேல் வாரென்.
நடுக்களம்:
எடார்டோ கமவிங்கா, யூசுஃப் ஃபோஃபானா, மேத்யூ கண்டோஸி, அட்ரியன் ரேபியாட், அரேலியன், ஜோர்டான்.
முன்கள வீரர்கள்:
கரீம் பெஞ்சிமா, கிங்ஸ்லி கோமன், ஒஸ்மானே டெம்பல், ஆலிவர் ஜிரார்ட், கிரிஸ்மேன், கைலியன், கிறிஸ்டோஃபர்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். கடந்த 2014ம் ஆண்டு ஃபைனல் வரை சென்ற அர்ஜெண்டினாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஜெர்மனியிடம் தோற்று கோப்பையை இழந்தது. எனவே இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
இந்த ஃபிஃபா உலக கோப்பைக்கான லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைக்கான அர்ஜெண்டினா அணி:
கோல்கீப்பர்கள்:
ஃபிராங்கோ அர்மானி, எமிலியானோ மார்டினெஸ், ஜெரோனிமோ.
தடுப்பாட்ட வீரர்கள்:
கோன்சாலோ மாண்டியேல், நாஹூவேல் மோலினா, ஜெர்மன் ஃபெசெல்லா, கிறிஸ்டியன் ரொமாரோ, நிகோலஸ், லிசாண்ட்ரோ, நிகோலஸ் டால்கியாஃபிகோ, மார்கோஸ் அகுனா, ஜூவான்.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: எந்தெந்த தேதிகளில் என்னென்ன போட்டிகள்..? முழு போட்டி விவரம்
நடுக்கள வீரர்கள்:
லியாண்டோ பாரெடஸ், கைடோ ரோட்ரிக்ஸ், என்ஸோ ஃபெர்னாண்டஸ், ரோட்ரிகா டி பால், பலாசியாஸ், அலெஜாண்ட்ரோ கோம்ஸ், அலெக்ஸிஸ்.
முன்கள வீரர்கள்:
ஃபாலோ டி பாலா, லியோனல் மெஸ்ஸி, ஏஞ்சல் டி மரியா, நிகோலஸ் கோன்சலச், ஜோக்வின், லாடரோ மார்டினெஸ்.