இது என் டர்ன்; குறுக்கே கையை விடாதே.. செஸ் விளையாடிய சிறுவனின் கை விரலை உடைத்த ரோபோ..! வைரல் வீடியோ

By karthikeyan V  |  First Published Jul 25, 2022, 2:45 PM IST

ரஷ்யாவில் ரோபோவுடன் செஸ் விளையாடிய 7 வயது சிறுவனின் கை விரலை ரோபோ உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 


44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கவுள்ளதால், செஸ் தான் இப்போதைக்கு ஹாட் டாபிக்காக உள்ளது. செஸ் ஒலிம்பியாட்டிற்கு தமிழகம் தயாராகிவருகிறது. வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சென்னை வந்துகொண்டிருப்பதால் தமிழகம் செஸ் ஒலிம்பியாட் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த செஸ் ஓபன் போட்டியில் ரோபோவுடன் 7 வயது சிறுவன் ஒருவன் விளையாடினான். அப்போது அந்த ரோபோ காயை நகர்த்த வேண்டிய தருணம். அந்த சமயத்தில் சிறுவன் காயை நகர்த்துவதற்காக குறுக்கே விட்டுள்ளான்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - Chess Olympiad 2022: நாடு முழுவதும் பயணித்து கோவை வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமோக வரவேற்பு..!

ரோபோக்களுடன் விளையாடும்போது, விதிகளை மிகச்சரியாக பின்பற்றவேண்டும். ஏனெனில் ரோபோக்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் தெரியாது. விதிமுறைகளை அப்படியே பின்பற்றும். இந்த சிறுவன், ரோபோ காய் நகர்த்த வேண்டிய தருணத்தில் கையை குறுக்கே விட்டதால் கைவிரலை பிடித்துவிட்டது ரோபோ.

இதையும் படிங்க - WI vs IND: அக்ஸர் படேல் காட்டடி அரைசதம்.. 2வது ODIயிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா

ரோபோவின் பிடியிலிருந்து சிறுவனின் கையை, சுற்றியிருந்தவர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். விதி மீறி விளையாடியதால் 7 வயது சிறுவனின் கையை ரோபோ உடைத்துவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சிசிடிவி வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

All acquisition that advanced AI will destroy humanity is false. Not the powerful AI or breaching laws of robotics will destroy humanity, but engineers with both left hands :/

On video - a chess robot breaks a kid's finger at Moscow Chess Open today. pic.twitter.com/bIGIbHztar

— Pavel Osadchuk 👨‍💻💤 (@xakpc)
click me!