செஸ் ஒலிம்பியாட்: மாமல்லபுரத்தில் ஒத்திகை செஸ் போட்டி..! 6 வயது சிறுமியும் 60 வயது முதியவரும் மோதிய சுவாரஸ்யம்

By karthikeyan V  |  First Published Jul 24, 2022, 2:41 PM IST

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 29ம் தேதி முதல் நடக்கவுள்ள நிலையில்,  இன்று ஒத்திகை செஸ் போட்டிகள் நடத்தப்பட்டுகின்றன.
 


44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. 

ஜூலை 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடக்கிறது. 29ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்கள் நேற்று முதல் சென்னை வர தொடங்கியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய அணியில் 20 வீரர்கள், வீராங்கனைகள்..! தலைமை பயிற்சியாளர் விஸ்வநாதன் ஆனந்த்

முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதால், செஸ் ஒலிம்பியாட்டை உலகமே வியக்குமளவிற்கு நடத்தி அசத்தும் வகையில் தமிழக அரசு மிகச்சிறப்பாக முன்னேற்பாடுகளை செய்துள்ளது. 

மாமல்லபுரத்தில் 22000 சதுர அடியில் பழைய அரங்கமும், 52000 சதுர அடியில் தற்காலிகமாக புதிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஒத்திகை செஸ் போட்டிகளை தொடங்கிவைத்தனர். மொத்தம் 1414 பேர் பங்கேற்று ஆடுமளவிற்கான அரங்கில் 707 செஸ் போர்டுகளில் விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க - Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று இந்தியாவின் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை

6 வயது சிறுவர், சிறுமியர் முதல் 60 வயது முதியவர்கள் வரை பலர் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போட்டிகள் இரவு 8 மணி வரை நடக்கவுள்ளது. இதில் 6 வயது சிறுமியும் 60 வயது முதியவரும் மோதினர். அந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்தது. அதேபோல வயது வித்தியாசமின்றி சிறுவர், சிறுமியர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு விளையாடினர்.

செஸ் ஒலிம்பியாட்டிற்கு 4 ஆண்டுகள் செய்ய வேண்டிய தயாரிப்பு பணிகளை தமிழக அரசு வெறும் 4 மாதங்களில் செய்து முடித்ததாக அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இது தமிழகத்திற்கு மட்டுமல்லாது நாட்டிற்கே பெருமை என்றும் தெரிவித்தார்.
 

click me!