Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று இந்தியாவின் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் ஒரேகானில் நடந்தது. ஈட்டி எறிதலில் ஃபைனலுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா முன்னேறினார்.
தொடக்கம் முதலே ஆண்டர்சன் 90.46மீ தூரம் ஈட்டி எறிந்தார். அதைத்தாண்டி வேறு எந்த வீரருமே வீசவில்லை. இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2வது முயற்சியில் 82.39மீ தூரமும், 3வது முயற்சியில் 86.37மீ தூரமும்வீசினார்.
இதையும் படிங்க - அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வு..? பாண்டியாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ரவி சாஸ்திரி
4வது முறை எறியும்போது 88.13மீ தூரம் வீசி அசத்தினார் நீரஜ் சோப்ரா. 4வது த்ரோ வீசியதுமே வெள்ளிப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்தார் நீரஜ் சோப்ரா.
இதையும் படிங்க - WI vs IND: தோற்றாலும் சந்தோஷத்தில் பூரன்.. ஜெயித்தாலும் சோகத்தில் தவான்..! இதுதான் காரணம்
ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வெல்ல, நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் முதல் முறையாக வெள்ளி வென்று சாதனை படைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.