
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்ட பழமொழி நம்மை இன்றும் தொடர்ந்து வருகின்றது. பொதுவாக இந்த ஒரு நல்ல விஷயங்களும் செய்ய வேண்டிய மாதமாக தை மாதமே சிறப்பாக விளங்குகிறது கல்யாணம் காதுகுத்து புது வீட்டில் புதுமனை விழா போன்ற நிகழ்வுகளும் இந்த மாதத்தில் இருந்தே தொடங்க ஆரம்பிக்கின்றது.இம்மாதத்தில் தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. தேவர்களின் உலகிற்கு தட்சிணாயனம் எனப்படும் ஆறு மாத இரவுக் காலம் முடிந்து, உத்தராயனம் எனும் ஆறு மாதப் பகல் காலம் ஆரம்பமாகும் மாதம் என்பதே தை மாதத்தின் பெருமையாகும். அப்போதுதான் பித்ருக்கள் உலகின் கதவும் திறக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.
ரதசப்தமி:
மக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர். தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரதசப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு உடல் ஆரோக்கியம், நோய் இல்லாமை, புத்திரப்பேறு, நிலையான செல்வம், பகைவர்களையும் வெல்லும் சக்தி, வெற்றி, தானியம் மற்றும் புண்ணியம் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தை அமாவாசை:
தை அமாவாசை ஜனவரி 18ஆம் தேதி அன்று துவங்குகிறது. மறுநாள் ஜனவரி 19ஆம் தேதி 2.31 அதிகாலை வரை இருப்பதாக கூறப்படுகிறது. உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன. அதில் தை அம்மாவாசையில் முன்னோர்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.
தை பூசம்:
பிப்ரவரி 1ஆம் தேதி அன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூச நட்சத்திரத்தில் தைபூசம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருக்கடவுளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் இந்த தை மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு மாலை போட்டு தைப்பூசம் ஒன்று கோயிலுக்கு செல்பவர்களும் இருக்கின்றார்கள். பாதியா துறையாகவும் செல்பவர்களும் இருக்கிறார்கள். திரு உணர்வோடு மாலையிட்டு பாதயாத்திரை சென்று முருகனை வழிபடும் பக்தர்களும் உள்ளனர் பால்காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி போன்ற காவடிகளும் தைப்பூசத் திருநாளன்று முருகனுக்கு சமயத்திற்கும் பக்தர்கள் பக்தியின் நிகழ்ச்சியுடன் உள்ளனர்.
சஷ்டி விரதம்:
சஷ்டியில் உலகமிருந்தால் கருப்பையில் குழந்தை நிற்கும் என்பதற்கு உதாரணமாக இருப்பது சஷ்டி விரதம் தான் ஜனவரி 24 அன்று தை பத்தாம் தேதியன்று சஷ்டி விரதம் துவங்குகிறது அன்று விரதம் இருந்து முருகனை தரிசித்து வந்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.தீராத வினைகள் மற்றும் துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சங்கடஹர சதுர்த்தி:
தை 22தேதி அன்று சங்கடஹர சதுர்த்தி இன்றைய விநாயகர் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள் முதற்கடவுளான விநாயகர் பெருமான் நம் கஷ்டங்களை தீர்க்கும் பெருமான் என்றும் கூறுவர். ஒவ்வொரு மாதத்திலும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது, இது சங்கடங்களை நீக்கும் விரதம். செவ்வாய்க்கிழமை வரும் சதுர்த்தி, "அங்காரக சதுர்த்தி" என்று அழைக்கப்படுகிறது, இது மிகவும் விசேஷமானது. ஜனவரி 22ஆம் தேதி சதுர்த்தி திதி வருகின்றது. அன்று திருமண விரைவில் நடக்க விரதம் இருந்து வேண்டிக் கொண்டால் திருமணம் விரைவில் நிச்சயிக்கப்படும் என்று கூறப்படுகிறது.இந்த நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் நல்லதே நடக்கும் .