சென்னை ஸ்ரீ தர்ம சாஸ்தா குருவாயூரப்பன் கோவிலில் அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா, ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில் உள்ளது. திருநீர்மலை (விஷ்ணுவின் இருப்பிடம்) மற்றும் சிவன் மலை (சிவனின் இருப்பிடம்) ஆகியவற்றுக்கு இடையே இக்கோயில் அமைந்துள்ளது. சபரிமலையின் கருவறை சிறிய மாறுபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷடாதர பிரதிஷ்டை ஆகமசாஸ்திரத்தின்படி பின்பற்றப்படுகிறது.
மிகவும் சக்தி வாய்ந்த இக்கோயிலில் ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஐயப்பன்), குருவைரப்பன், சிவன், கணபதி, மாளிகைபுரத்து அம்மன், சுப்ரமணியர், ஆஞ்சநேயர், நாகராஜா & நாகயக்ஷி ஆகிய தெய்வங்கள் உள்ளன.
இந்நிலையில் கோவிலில், இன்று (29.11.23) காலை ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரண்டாம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்ததும் உற்சவ பூஜைகள் தொடங்கியது. காலை 7 மணி முதல் 7.50 மணிக்குள் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, 6.12.23 வரை உற்சவ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, சஹஸ்ர கலசாபிஷேகம், சர்வ ஐஸ்வர்ய பூஜை, ஸ்ரீதர்ம சாஸ்தா ஹோமம் நடக்கும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ குருவாயூரப்பன் மற்றும் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆகியோரின் அருள் பெற்றனர்.