காதல் ஜெயிக்குமா? அதிர்ஷ்டம் தேடி வீடு தேடி வருமா? வராஹமிகிரர் சொன்ன வலாட்டி குருவி சகுனம்!!

By Asianet Tamil  |  First Published Jul 26, 2024, 12:23 PM IST

ஜோதிடத்தில் காதல் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று சிலருக்கு தெள்ளத் தெளிவாக ஜோதிடர் கூறி விடுவார். ஆனால், வாலாட்டி குருவி சகுனம் குறித்து தெரியுமா? பார்க்கலாம் வாங்க.


வலாட்டி குருவிகள்:
வாலாட்டி குருவிகள் கறுப்பாக மஞ்சளும் வெள்ளையும் கலந்த நிறத்தில், வெள்ளை, கறுப்பு கலந்த நிறத்தில் இருக்கும். இதை பார்த்தால்  நல்லது, கெட்டது என்று சில சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கான காரணத்தை வராஹமிகிரர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளார்.

காதலை ஜெயிக்க வைக்கும் குருவிகள்:
வாலாட்டி குருவிகள் வண்டல் மண்ணில் அமர்ந்திருப்பதை பார்த்தால்  அன்றைக்கு நல்ல சுவையான உணவு கிடைக்கும். மாட்டுச் சாணத்தின் மீது நின்றிருக்கும் பறவைகளைப் பார்த்தால்  பால், தயிர், வெண்ணெய் கிடைக்கும். ஆடு, செம்மறி ஆட்டின் முதுகில் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் காதல் கைகூடும். காதலன், காதலி உடனே சேருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நல்ல சகுனங்கள்
ஏரி, ஆறு,குளங்கள், யாக சாலைகள், மாட்டுத் தொழுவம், பூ, பழம் உடைய மரங்கள், கோவில், நல்லோர் கூடிய சபைகள், பசு,யானை, குதிரை, பாம்பு ஆகியவற்றின் முதுகில் அமர்ந்திருக்கும் போது பார்த்தால் நல்லது என்று கூறுகிறார் வராஹமிகிரர்.

புதையல் கிடைக்கும்:
வாலாட்டிக் குருவிகளை புல்தரையில் நின்று மேய்ந்து கொண்டிருக்கும் போது பார்த்தால் பட்டுத்துணிகளும், ஆடைகளும் கிடைக்குமாம். தண்ணீர் குடிக்கும் நிலையிலும் காலை நேரத்திலும் பார்த்தால் நல்ல செய்தி வரும். வாலாட்டிக் குருவிகள் மலஜலம் கழிக்கும் இடத்தில் தோண்டினால் நிலக்கரி கிடைக்கும். புணரும் இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும். உணவைக் கக்கும் இடத்தில்  மைகா, அபிரகம் கிடைக்கும் என்கிறார் வராஹமிகிரர்.

செல்வ இழப்பு ஏற்படும்:
சாம்பல், எலும்புகள் மீது, சுடுகாட்டில், மண்ணாங்கட்டியில், கழுதை, ஒட்டகம், எருமை முதுகின் மேல், வீட்டுக் காம்பவுண்ட் சுவர் மீது, சிறகு அடிக்கும் நிலையில், மாலை வேளையில் பார்த்தால் கெட்ட செய்திகள் தேடி வருமாம். அதே நேரத்தில் வண்டிகள் மீது நின்று கொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்தால் நாட்டுக்கு சேதம் ஏற்படுமாம், வீட்டுக்கூரை மீது நின்றிருக்கும் பறவைகளைப் பார்த்தால் செல்வ இழப்பு ஏற்படும். தோல் முதலிய பொருட்களின் மீது நின்று கொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்தால் சிறைவாசம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எந்த கலர் குருவிக்கு என்ன நிறம்:
முகம் முதல் கழுத்து வரை கறுப்பாக இருக்கும் சம்பூர்ணம் என்ற குருவிகளைப் பார்த்தால் உங்கள் ஆசை நிறைவேறும். மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளைப் பார்த்தால் தொல்லைகளே வரும்.

என்ன பரிகாரம்:
கறுப்பு வெள்ளை கலந்த வாலாட்டி குருவிகளை பார்த்து விட்டோம் என்று கலங்க வேண்டாம் அதற்கும் பரிகாரம் இருக்கிறது. உடனே பிராமணர்களையும் குருவையும் புனித மகான்களையும் வணங்க வேண்டும். ஒரு வாரத்துக்கு மாமிச உணவுகளை சாப்பிடாமல் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். 

click me!