விஜய தசமி அன்று பள்ளியில் சேர்க்கும் பொழுது குழந்தைகளை ஏன் நெல்லில் எழுத சொல்கிறோம் என்பது தெரியுமா?

By Asianet Tamil  |  First Published Apr 25, 2023, 7:19 PM IST

கல்வியை குழந்தைகள் முதன் முதலில் கற்க ஆரம்பிக்கும் போது அரிசி அல்லது நெல்லில் எழுத செய்வோம். அப்படி ஏன் நாம் எழுத வைக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா?


இன்றைய காலக்கட்டத்தில் கல்வி அனைவருக்கும் பொதுவான அதே நேரத்தில் இன்றியமையாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் கல்வியில் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த உலகில் எப்போதும் நிலைத்து நிற்கும் செல்வம் எனில் அது கல்வி செல்வம் மட்டுமே. நம் கற்ற கல்வியானது நாம் எத்தகைய சூழலில் இருந்தாலும் நம்மை விட்டு செல்லாத செல்வமாகும்.

காலத்திற்கும் நீடித்து நிற்கும் செல்வம் எனில் அது கல்விச் செல்வம் மட்டுமே. கொடுத்தாலும் குறையாது அதே நேரத்தில் அள்ள அள்ள வற்றாத ஒரு செல்வம் என்றால் அது கல்வி செல்வமே. அப்படிப்பட்ட கல்வியை குழந்தைகள் முதன் முதலில் கற்க ஆரம்பிக்கும் போது அரிசி அல்லது நெல்லில் எழுத செய்வோம். அப்படி ஏன் நாம் எழுத வைக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா?

கல்விக்கான முக்கியத்துவம்:

மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் முக்கியமான ஒரு சொத்து மற்றும் பாக்கியம் எனில் அது கல்வி ஆகும். எனவே தான் கல்வி கற்க ஆரம்பிக்கையில், முதலில் அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து வருகிறோம். குறிப்பிட்டு சொன்னால் விஜயதசமியன்று இந்த பூஜையை செய்வோம். ஏன்னென்றால் விஜயதசமி அன்று தான் இச்சா, கிரியா மற்றும் ஞானம் ஆகிய 3 சக்திகளும் ஒன்று கூடி கல்வி கற்க துணை புரிவார்கள் என்பது ஐதீகம்.

தவிர குழந்தைகள் இந்த சிறப்பான நாளில் தான் முதன் முதலாக எழுத ஆரம்பிப்பார்கள். அதாவது அவர்கள் தங்களின் பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது? என்பதை கற்று கொள்கின்றனர். இவ்வாறு எழுதப்படும் முதல் எழுத்துகளை நெல்லில் அல்லது அரிசியில் எழுத செய்ததற்க்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

அரிசி அல்லது நெல்லில் எழுத சொல்வது ஏன்?

ஓங்காரம் என்பது ஒரு செயலின் தொடக்கத்தையும் இறுதியையும் குறிக்கும் சொல்லாகும். ஆகையால் தான் குழந்தைகள் முதலில் ஓம் என்ற சொல்லை எழுதி தங்களது கல்வி பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.முந்தைய காலத்தில் 5 வயது முழுமையடைந்த பின் தான் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது 2 - 3 வயதிற்குள்ளாகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க தொடங்கி விடுகின்றனர்.

முந்தைய காலத்தில் குழந்தைகள் குருகுலத்தில் ஓம் எனும் வார்த்தையை மணல் அல்லது நெல்லால் எழுதி கல்வி கற்க ஆரம்பித்தனர்.
ஆனால் இன்றைய காலங்களில் ஒரு அகலமான மற்றும் பெரிய தட்டில் அரிசியை பரப்பி வைத்து அதில் ஓம் என்ற வார்த்தையை எழுதுகிறார்கள். 


கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுத கற்றுக் கொள்வது மற்றும் ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற சொல்லை மணல், நெல் அல்லது அரிசியில் குழந்தைகளை எழுத சொல்கிறோம்.அன்னை சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து, குழந்தைகளின் ஞானத் தேடலுக்கான முதற்படியில் அடியெடுத்து வைக்கவே இப்படி செய்கிறோம்.
கல்வியறிவின்மை மற்றும் அறியாமை என்னும் இருளை அகற்றி வாழ்வில் வெற்றிப் பெற அடியெடுத்து வைப்பதை மறைமுகமாக உணர்த்துவதே இந்த நிகழ்வாகும் .

மேலும் கல்வி ஞானத்தின் கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க விஜயதசமியன்று மழலை செல்வங்களை பள்ளியில் சேர்த்து இவ்வாறு எழுத வைப்பதால் அவர்கள் கல்வியில் மேன்மை அடைந்து சிறப்புடன் விளங்கவவே இந்த முறை காலகாலமாக கடைபிடித்து வரப்படுகிறது.

கல்வி மட்டுமல்லாமல் பாட்டு, பாரம்பரிய இசைக் கருவிகள், பாரம்பரிய இசை, நடனம், பிறமொழி பயிற்சி, புதிய தொழில் கற்றுக் கொள்ள என்று இந்த நாளில் தொடங்குவார்கள். இவ்வாறு செய்வதால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைத்து அவர்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி அடைவார்கள் என்பது நம்பிக்கை யாகும் .

Tap to resize

Latest Videos


பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு இத மட்டும் வாங்கி தாங்க- எதிரிதொல்லை, திருஷ்டி,பில்லி எதுவும் நம்மை நெருங்காது

click me!