பண வரவு பெருக பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்...!!

Published : Feb 02, 2024, 12:14 PM ISTUpdated : Feb 02, 2024, 12:39 PM IST
பண வரவு பெருக பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்...!!

சுருக்கம்

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை, பச்சை  கற்பூரம் மூலம் எப்படி தெய்வ அருளோடு பெருக்குவது என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் கணவன்,மனைவி என்று இருவரும் வேலைக்கு சென்றால் தான் பண சம்பாதித்து சேர்த்து வைக்க முடியும். இப்படி எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்குவதில்லை. எல்லாமே வாங்கிய கடனை அடைப்பதற்கே சரியாகிவிடுவதால், எப்படி சம்பாதித்த பணத்தை சேமித்து வைக்க முடியும் என்ற நிலைமை சிலருக்கு இருக்கும். இன்னும் சிலருக்கோ சம்பாதித்த பணம் அனைத்தையும் மருத்துவமனைக்கே செலவழிப்பார்கள்.

ஏன் இப்படி என்று யோசிக்க முடியாத அளவிற்கு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட பலர் பலவிதமான செய்வார்கள். ஆனால் இதற்கு ஒரே தீர்வு பச்சை கற்பூரத்தை கொண்டு செய்யும் பாரிகாரம் தான். எனவே, நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை, இந்த பரிகாரம் மூலம் எப்படி தெய்வ அருளோடு பெருக்குவது என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

பச்சை கற்பூரம் பரிகாரங்கள்:

வீட்டில் பண வரவு அதிகரிக்க, வீட்டை முதலில் சுத்தமாக வைக்க வேண்டும். ஏனெனில், வீடு  சுத்தமாகவும், வாசனையாகவும் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் மகாலட்சுமி தங்கி அருள்புரிவாள். எனவே உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரம் இயற்கையாகவே நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள், கண்திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றலை நீக்க இது உதவுகிறது.

பச்சை கற்பூரம் மருத்துவ குணமுடையது. இயற்கையாகவே, பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் தன்மையுடையது. எனவே, இதை உங்கள் வீட்டின் வாசலில் வைக்கும் போது வீட்டில் பண ஈர்ப்பு தன்மை அதிகரிக்கும். நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் வைக்கும் போது வசிய தன்மை அதிகரிக்கும். மேலும், பச்சை கற்பூரத்தில் இருக்கும் வாசனை வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை நீக்க உதவுகிறது.

பணப்புழக்கத்தை பெற உங்க வீட்டு பூஜை அறையில் இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து வழிபட வேண்டும். அதுபோல், பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதை முடித்து போட்டு வீட்டின் குபேர மூலையில் வைத்து தீப தூபங்கள் காட்டி வழிபாடு செய்து வந்தால்,  உங்கள் வீட்டில் எப்போதும் பணம் நிலைத்து இருக்கும்.

பச்சைக் கற்பூரத்தை பணம் வைக்கும் இடத்தில் தான் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் பணம் கஷ்டம் உருவாகாது மற்றும் வீண் செலவுகள் வராது. மேலும் பணம் இருக்கும் இடத்தில் பச்சைக் கற்பூரத்தை வைக்கும் போது அங்கு எதிர்மறை சக்தியை தடுத்து நிறுத்தும். உதாரணமாக,பண வரவு அதிகரிக்க கல்லாப்பெட்டி, பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். அது போல் ஒன்று அல்லது இரண்டு கற்பூரத்தை பேப்பரில் சுற்றி, உங்கள் பணப்பை அல்லது பர்சில் வைக்க வேண்டும். இப்படி வைத்தால் உங்களுடைய பர்சில் பணம் ஒருபோதும் குறையாது.

PREV
click me!

Recommended Stories

Nagamani : பாம்பின் தலையில் இருந்து விழுந்த கல்.! நாகமணியாக வழிபடும் மக்கள்.! உண்மையில் நாகமணி இருக்கிறதா? உண்மை என்ன?
chitra pournami girivalam சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதன் ஆன்மீக, அறிவியல் ரகசியங்கள்