கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கொயேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவம்

Published : Feb 25, 2023, 11:02 AM IST
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கொயேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவம்

சுருக்கம்

அரியலூர்  மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் மகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கொடி மரத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கொடி ஏற்றி மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவானது 11 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதில் கணக்க விநாயகருக்கு சாந்தி ஹோமம், வாஸ்து ஹோமம், அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 9 நாட்களுக்கு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், சுவாமி வீதியுலா, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இதில் 10ம் நாள் நிகழ்வாக தீர்த்தவாரி,  யாகசாலை கலசங்கள் அபிஷேகம்  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 11ம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீ அம்பாள் உற்சவம் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை  சோழீஸ்வரர் ஸ்ரீ பாத குழுமம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்தர்கள், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!