விநாயகரின் இந்த 1 மந்திரம் போதும்.. குறைவில்லா செல்வம் முதல் எவ்வளவு பலன்கள் உண்டு தெரியுமா?

By Ma riya  |  First Published May 16, 2023, 7:32 PM IST

அனைத்து மந்திரங்களுக்கும் இந்து மதத்தில் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. அதிலும் விநாயகரின் மந்திரங்களில் ஒன்றான 'ஓம் கன் கணபதியே நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் எண்ணற்ற பலன்கள் ஏற்படுகின்றன. 


எல்லா தெய்வங்களுக்கும் ஒரு சிறப்பு மந்திரம் உண்டு. அதை உச்சரிப்பது நம் வாழ்க்கையில் நன்மை பயக்கும். அத்தகைய மந்திரங்களில், கணபதியின் சில சிறப்பு மந்திரங்கள் உள்ளன.  அவற்றின் உச்சரிப்பு நமக்கு பலனளிக்கும்.

கணபதியின் மந்திரங்கள் என்று வந்தாலே, முதலில் 'ஓம் கன் கணபதியே நம' மந்திரம் தான் உச்சரிக்கப்படுகிறது. எந்தவொரு வழிபாட்டின் தொடக்கத்திலும் விநாயகரை அழைப்பதற்கு இந்த மந்திரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மங்கள மந்திரம். 

Tap to resize

Latest Videos

விநாயகப் பெருமான் எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுப்பவராக நம்பப்படுகிறார்.   அவரை இக்கட்டான காலங்களில் வழிபடுவது நல்ல பலனளிக்கும். 'ஓம் கன் கணபதியே நம' என்ற  மந்திரத்தின் தோற்றம்  இந்தியாவில் ஆரம்பகால வேத காலத்தில் பல இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கண்டறியப்பட்டுள்ளது. முதன்முதலில் கணபதி உபநிடதத்தில் எழுதப்பட்டது. இது தெய்வத்திற்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டைய நூலாகும்.

இந்த மந்திரம் பாரம்பரியமாக எல்லா வயதினரும் செழிப்பு, ஞானம், மகிழ்ச்சியை பெற  உச்சரிக்கப்படுகிறது. இது இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள் இந்து பண்டிகைகளில் பாடப்படுகிறது. மக்களும் அனுதினமும் சொல்கிறார்கள். 

இதையும் படிங்க: அதிர்ஷ்டத்தை மாற்ற சிவப்பு மிளகாய்!! எப்படி?

இந்த மந்திரத்தை தினமும் உச்சரிப்பது மனதிற்கு அமைதியை அளிக்கிறது. உங்களுக்கு ஞானத்தை தருகிறது. இதை உச்சரிப்பதால் வேலையில் உங்கள் கவனம் நிலைத்து, மனதோடு சேர்ந்து உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த மந்திரம் உங்களுக்கு வளமான வாழ்வை தரும். 'ஓம் கன் கணபதியே நம' மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் பல நன்மைகள் கொண்டது. இந்த மந்திரம் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, பக்தருக்கு வெற்றி, செழிப்புடன் அருள்வதாக கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவை மேம்படுத்தவும் இந்த மந்திரம் துணை புரியும்.  கணவன்-மனைவி இடையே அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க இந்த மந்திரம் உதவும் என்பது ஐதீகம். 

மனதார விநாயகரை நினைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வாருங்கள். உங்களுக்கு செல்வம், மனநிம்மதி வேலையில் கவனம் எல்லாம் கிடைக்கும். 'ஓம் கன் கணபதியே நம'..! 

இதையும் படிங்க: கஜகேசரி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்!! அதிர்ஷ்டமும் பணமும் உங்களை தேடி வரும்..!

click me!