Bakrid 2023: தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி சலாஹூதீன் முகமது அயூப் அறிவித்திருக்கிறார்.
இஸ்லாமியர்களுடைய இனிய ஈகை திருநாள் பக்ரீத் பண்டிகையானது, இந்தியாவில் வரும் ஜூன் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷிலும் அதே தினம் தான் கொண்டாடப்படுகிறது. துக்ஹஜ் மாத முதல் பிறை பெரும்பாலான இடங்களில் தென்பட தொடங்கியுள்ளது. அன்றைய தினமே குர்பானி கொடுத்து தொழுவார்கள். அனைவரும் ஒற்றுமையாக வாழ பிரார்த்தனையும் செய்வார்கள்.
ஈத்-உல்-ஜுஹா என்றால் இறைத்தூதர் நபி இப்ராஹின் தியாகத்தை போற்றும் பண்டிகையாகும். இதனை ஈகைத் திருநாள்/ தியாகத் திருநாள் என்பார்கள். இஸ்லாமிய மாதம் ஜுல் ஹிஜ்ஜாவின் பத்தாவது தினத்தில் கொண்டாடப்படுவதே பக்ரீத் பண்டிகை. இதை 3 நாள்கள் கொண்டாடுவார்கள். இந்தாண்டுக்கான கொண்டாட்டம் நெருங்கி வருகிறது.
சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய ஈராக்கில் இப்ராஹிம் என்ற இஸ்லாமிய தூதுவர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவருக்கு ரொம்ப காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமலே இருந்துள்ளது. இவருக்கு கடவுள் ஆசியால் இரண்டாவது மனைவியான ஃஆசரா வழியாக ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்டார்கள். அவர் வழிவந்தவர்களே இன்றைய அராபியர்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
தவமிருந்து பெற்ற இப்ராஹிமின் மகன் இஸ்மாயிலை அவருடைய சிறு வயதில் தனக்கு பலியிட வேண்டும் என, கடவுள் கனவு மூலமாக இப்ராஹிமுக்கு கட்டளையிட்டுள்ளார். இதை தன் மகனுடன் பகிர்ந்து கொண்டு அவருடைய விருப்பத்தோடு பலியிட இப்ராஹிம் முயற்சி செய்யும்போது, இறைவன் சிஃப்ரயீல் என்ற வானதூதரை அனுப்பி தடுத்துள்ளார். ஒரு ஆட்டை அளித்து இஸ்மாயிலுக்கு பதிலாக அதை பலியிட கடவுள் கட்டளையிட்டார் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாப்பிட்ட பிறகு நஞ்சாகும் 7 உணவுகள் இவைதான்... இனி உஷாரா இருங்க!!
பக்ரீத் கொண்டாட்டம் 2023:
பக்ரீத் தினத்தில் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் சூரியன் உதித்த பின்னர் மசூதியில் சிறப்புத் தொழுகை செய்வார்கள். அன்றைய தினம் கண்டிப்பாக மதியத் தொழுகையில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னர் நடக்கும் பிரசங்கங்களிலும் இஸ்லாமியர்கள் பங்கேற்பார்கள். இவையெல்லாம் நிறைவடைந்து வீடு திரும்பும்போது ஒருவருக்கொருவர் 'ஈத் முபாரக்' என்ற வாழ்த்துகளை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டு ஆடுகளை குர்பானியாக அளிப்பார்கள்.
பக்ரீத் அன்று பகிர்ந்தளித்தல், ஹஜ் என்றால் என்ன?
பக்ரீத் அன்று இறைவனின் பெயரால் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிட்டு அதை 3 சம பங்குகளாகப் பிரிப்பார்கள். இதில் ஒரு பங்கை பக்கத்து வீட்டாருக்கும், நட்பு வட்டாரத்துக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்பார்கள். மூன்றாம் பங்கை தங்களுக்கு பயன்படுத்துகின்றனர். வசதியாக இருக்கும் இஸ்லாமியர்கள் கட்டாயம் அடிப்படை ஹஜ் கடமைகளில் ஒன்றாக இதை செய்ய வேண்டும்.
பக்ரீத் கடமை:
சாப்பாடு, சந்தோஷம் ஆகியவற்றை மற்றவருடன் பகிர்வது, ஏழைகளுக்கு உதவுவது, நபி இஸ்மாயிலை போற்றி நினைவுகூறுவது ஆகியவை பக்ரீத் பண்டிகை அன்று செய்யவேண்டியவை.
இதையும் படிங்க: எதை சாப்பிட்டாலும் இப்படி ஆகுதா?உணவு அலர்ஜி Vs உணவு சகிப்புத்தன்மை... எந்த பிரச்சினை காரணம்?