ஸ்ரீ சுந்தரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா! மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்!வியர்ந்து பார்த்த பொதுமக்கள்

By vinoth kumarFirst Published Aug 12, 2023, 12:13 PM IST
Highlights

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் ஸ்ரீ சுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

ஸ்ரீ சுந்தரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு மாணவ- மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ஆடியது அனைவரையும் கவர்ந்தது. 

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் ஸ்ரீ சுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 21-ஆம் ஆண்டு ஆடி மாதம் 4-ம் வெள்ளிக்கிழமையையொட்டி  திருவிழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் கூழ்வார்க்கப்பட்டது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

விழாவில்  கோவிலின் முன்பு அதே பகுதியில் உள்ள ஸ்கில் டெவலப்மென்ட் சென்டர் மற்றும் நியூ பிரெஞ்ச் மானிடரியை சேர்ந்த மாணவ- மாணவிகளின் இசை, பாடல் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவிகள் கையில் விளக்குகளை ஏந்தி பரதநாட்டியம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது. 

மேலும் மாணவ- மாணவிகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். ஸ்கில் டெவலப்மெண்ட் சென்டர் தாளாளர் சிவசங்கரி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

click me!