அனைத்து கட்டுமான பணிகளுக்கும் அதிரடி தடை - தேசிய பசுமை தீர்ப்பாயம்  ஆணை...!!!

 
Published : Nov 09, 2016, 06:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
அனைத்து கட்டுமான பணிகளுக்கும் அதிரடி  தடை - தேசிய பசுமை தீர்ப்பாயம்  ஆணை...!!!

சுருக்கம்

அனைத்து கட்டுமான பணிகளும் அதிரடி தடை - தேசிய பசுமை தீர்ப்பாயம்  ஆணை...!!!

தற்போது சில நாட்களாகவே, டெல்லியை பொறுத்தவரையில், பல  சர்ச்சைகள்   எழுகிறது. அதாவது, டெல்லியில்  மட்டும் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  இதனை  தொடர்ந்து, அடுத்த 7 நாட்களுக்கு அனைத்துவிதமான கட்டுமான பணிகளையும் நிறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக  உத்திரவிட்டுள்ளது.

சென்ற வாரம்,  தீபாவளி  பண்டிகை  இருந்ததால்,  மக்கள்  அதிகளவில் பட்டாசுகளை  பயன்படுத்தியதாலும்,  டெல்லியைச் சுற்றியுள்ள ராஜஸ்தான், உ.பி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எரியூட்டப்படும் பயிர் கழிவுகள், ஆகியவை காரணமாக காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்து காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு  நடைபெற்று  வந்தது.

இதன்  தொடர்ச்சியாக  அடுத்து  வரும் 7 நாட்களுக்கு டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், அனைத்து விதமான கட்டுமான பணிகளுக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக தடை  விதித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
click me!