கான்கிரீட் சிற்பங்கள் – நீங்களே செய்து உங்களை வீடுகளை அரண்மனையாக்கலாம்…

 
Published : May 01, 2017, 01:52 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
கான்கிரீட் சிற்பங்கள் – நீங்களே செய்து உங்களை வீடுகளை அரண்மனையாக்கலாம்…

சுருக்கம்

Concrete Sculptures - You Can Make Your Homes Furnished

மரத்தில் செய்யக் கூடிய அத்தனை வேலைகளையும் கான்கிரீட்டில் செய்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.

இவை நீண்ட காலம் உழைக்கும்.

கடினமாக இருக்கும்.

பூச்சி, ஈரம் போன்றவற்றால் பாதிக்கப்படாது.

விலையும் குறைவாகவே இருக்கும்.

கான்கிரீட் சிற்பங்கள்

கான்கிரீட் பரப்பைப் பளபளப்பாக்கி. அந்தப் பரப்பின் மேல் ஸ்டென்சில் எனப்படும் அச்சுத்தாளைப் பரப்பி, அதில் நீங்கள் விரும்பும் வடிவத்தை இடம் பெறச் செய்யலாம்.

அச்சுத்தாளைக் கான்கிரீட் பரப்பில் ஒட்டிய பின் ஒரே நேரத்தில் செதுக்கி எடுக்கும் வேலையையும், பளபளப்பாக்கும் வேலையையும் மேற்கொள்வர்.

இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சிற்பத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுகிறீர்களா?

பளிங்கில் இதைப் போல் செதுக்கி எடுப்பதற்கு ரூ.7 ஆயிரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். கான்கிரீட்டில் செதுக்கினால் ஒரே ஒரு ஆயிரம்தான் ஆகும்.

எப்படி பயன்படுத்தலாம்?

1.. இந்த வேலைப்பாடுகளை அலங்காரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

2.. விளம்பரங்களை அமைத்துக் கொடுக்கலாம்.

3.. கால்கள் வழுக்கும் நடைபாதைகள், குளியலறைத் தரை போன்ற இடங்களில்
இந்த முறையைப் பின்பற்றி செதுக்கு வேலைகளைச் செய்தால் உராய்வை அதிகரிக்கலாம். வழுக்கிவிடுவதைக் குறைக்கலாம்.

4.. உறுதியான, உடைந்து போகாத கலை வேலைப்பாடுகள் சாத்தியமாகும். ஒளித் தடுப்புத் தேவைகளுக்கு ஏற்றது.

5.. கணினியையும் பயன்படுத்தி விதவிதமான அச்செழுத்துக்களையும் வேலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். எந்த மொழி எழுத்துக்கள் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.

6.. உளுத்துப் போகுமா? கறையான் பிடிக்குமா? வார்னீஷ் அடிக்க வேண்டுமா? என்று கவலைப்படத் தேவையில்லை.

7.. இயற்கையிலேயே பற்பல எழிலான தோற்றங்களை உருவாகுமாறு செய்யலாம். இயற்கை வண்ணங்களை உபயோகிக்கலாம்.

PREV
click me!