
பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி கூட இல்லாத திமுக பாஜகவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவா இது உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாக இல்லையா? இப்படியும் நீங்கள் கேவலப்படலாமா என திமுகவை பாஜக மற்றும் அதிமுகவினர் ட்விட்டரில் ஒரே ஒரு ஹேஷ் டேக்கை டிரென்ட் செய்து வருகின்றனர் .
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. விவாதத்துக்கு பிறகு, தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்; சர்வாதிகாரத்தின் முள்ளாசனத்தில் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை எல்லாம் தோற்கடித்து இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாபெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழுமனதான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி கூட இல்லாத திமுக பாஜகவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவா? என திமுகவை #ZeroMPDMK ஹேஷ் டேக் பயன்படுத்தி தேசிய அளவில் ட்ரெண்டாக்கி திமுகவை நாறடித்து வருகின்றனர்.