இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு... திமுக நிர்வாகி கைது.!

Published : Aug 27, 2020, 09:00 PM IST
இளம்  பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு... திமுக நிர்வாகி கைது.!

சுருக்கம்

சென்னை தண்டையார்பேட்டையில் இளம்பெண்ணிற்கு செல்போன் மூலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து திமுக அதிமுக நிர்வாகிகள் பாலியல் வழக்கில் கைதாகி வருவது தொடர்கதையாகவே உள்ளது.  

சென்னை தண்டையார்பேட்டையில் இளம்பெண்ணிற்கு செல்போன் மூலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து திமுக அதிமுக நிர்வாகிகள் பாலியல் வழக்கில் கைதாகி வருவது தொடர்கதையாகவே உள்ளது.

கடந்த ஜூன் 24 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நயினார் குப்பத்தில் சசிகலா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.அந்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றிய போலீசார், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். அதே பகுதியை சேர்ந்த திமுகவின் நிர்வாகியாக இருக்கும் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் தன் தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடியதாக புகார் தெரிவித்திருந்தார் அவரது அண்ணன்.

சென்னை தண்டையார்பேட்டையில் நேதாஜி நகர் 5வது தெருவைச் சேர்ந்த மனோகர், முன்னாள் தி.மு.க மாவட்ட துணைசெயலாளர். ஃபாஸ்ட் புட்டை நடத்தி வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போன் மூலம் ஆபாச வீடியோக்கள் அனுப்பியும், போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தி.மு.க. நிர்வாகியின் இச்சைக்கு பாதிக்கப்பட்ட அந்தப் பெண், இது தொடர்பாக ஆர்.கே. நகர் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், தி.மு.க நிர்வாகி மனோகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த நபரால், மேலும் வேறு ஏதாவது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா..? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு