"சோதனை என்ற பெயரில் மாணவிகளிடம் அத்து மீறிய அதிகாரிகள்..." விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவு

 
Published : May 09, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"சோதனை என்ற பெயரில் மாணவிகளிடம் அத்து மீறிய அதிகாரிகள்..." விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவு

சுருக்கம்

women commission order to investigate neet checking

மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வை இந்தியா முழுவதும் 103 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 11 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் பேர் எழுதினர்.

அதிகப்படியான சோதனை நடவடிக்கைய தேர்வு எழுதும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சோதனையால் தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது.



தோடு, மூக்குத்தி, செயின், பெல்ட், செயின் டாலர், சட்டை பின், தொப்பி, மோதிரம், அரைக் கை வைத்த லேசான ஆடைகளையே அணிந்திருக்க வேண்டும். ஆடையில் பெரிய பொத்தான்களோ, பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது. ஷூ வகைக் காலணிகளுக்கும் தடை போடப்பட்டது.

தேர்வு எழுதிவிட்டு திரும்ப வந்த மாணவி ஒருவர் செய்தியாளர்களிடம் உள்ளாடைகளை அளித்து விட்டு சென்றதாகவும் தெரிவித்தார். என் உள்ளாடையைக் கழற்றச் சொன்னது எனக்கு வேதனையளிக்கிறது’ என தெரிவித்தார்.

உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு எழுதியதால் பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். கேரளமாநிலம் கண்ணூரில் நடந்த  இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நீட் தேர்வில்  சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் மாணவ, மாணவிகளிடம் இந்த கெடுபிடி காட்டினர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அது குறித்து முழுமையான விசாரணையை நடத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. விதிமுறை என்ற பெயரில் மாணவிகளிடம் வரம்பு மீறி நடப்பதை ஏற்க முடியாது என்றும் தேசிய மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?