ஸ்டாலினுக்கு தெம்பு, தைரியம் இருக்கா..? ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா..? ஜெயக்குமார் பதிலடி.!

Published : Jan 23, 2021, 10:01 PM IST
ஸ்டாலினுக்கு தெம்பு, தைரியம் இருக்கா..? ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிட  தயாரா..? ஜெயக்குமார் பதிலடி.!

சுருக்கம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெம்பும் தைரியமும் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் திமுக எம்.பி.க்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.  

அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம்  வேட்பாளார்களை நிறுத்துவது என்று திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றால்போல் சென்னை ராயபுரத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, “கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுகவின் தவறு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில்தான் திமுகதான் போட்டியிடும். ராயபுரத்தில் திமுக வெற்றி பெறும்” என்று பேசியிருந்தார்.

 
ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் 1991 முதல் 2016 வரை ஐந்து முறை வெற்றி பெற்ற  தொகுதியாகும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இத்தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராயபுரத்தில் திமுக போட்டியிடும் என்று பேசிய ஆர்.எஸ். பாரதியின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெம்பும் தைரியமும் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.  ராயபுரத்தில் 5 முறை என்னை வெற்றி பெற மைத்த மக்கள், 6வது முறையாகவும் தேர்வு செய்வார்கள்” என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

அதிமுக தனிக்கட்சி அல்ல; பாஜகவின் கிளை அமைப்பு.. போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!