இஸ்லாம் தமிழை ஏற்குமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? யுவனுக்கு பாஜக பொருளாளர் கேள்வி!!

Published : Apr 18, 2022, 06:58 PM IST
இஸ்லாம் தமிழை ஏற்குமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? யுவனுக்கு பாஜக பொருளாளர் கேள்வி!!

சுருக்கம்

இஸ்லாம் தமிழை ஏற்குமா? தமிழில் பெயர் வைத்து கொள்ள முடியுமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? என்று யுவனிடம் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

இஸ்லாம் தமிழை ஏற்குமா? தமிழில் பெயர் வைத்து கொள்ள முடியுமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? என்று யுவனிடம் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட விவகாரத்தில், இளையராஜா விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா, நான் கருப்பு திராவிடன் என்று குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. குறியீடாக யுவன் சங்கர் ராஜா எதனை சொல்ல வருகிறார் என்று நெட்டிசன் விவாதிக்க தொடங்கியுள்ளனர். முன்னதாக மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என்று புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது இந்த விவகாரம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரை சென்றுள்ளது. இதுக்குறித்து அவர் கருத்து கூறுகையில், மோடியை ஆதரித்ததற்காக இளையராஜாவை அவமதிக்கப்படுகிறார் என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ஆடைகளை அணிந்து, நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன் என்று கூறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

அவரின் இந்த பதிவு அதிக லைக்குகளையும் ஷேர்களையும் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திராவிட கொள்கைகளுக்கு எதிராக பாஜக களமாடி வருகிறது. அதன் முக்கிய தலைவரான மோடியை தந்தை இளையராஜா ஆதரித்துள்ள நிலையில், மகன் யுவன் சங்கர் ராஜா திராவிட கொள்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது விவாதப்பொருளாய் மாற்றியுள்ள நிலையில் இஸ்லாம் தமிழை ஏற்குமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? என்று பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், தம்பி யுவன் நீங்கள் பிறப்பால் தமிழன். மதத்தால் இன்று இஸ்லாமியன். இஸ்லாம் தமிழை ஏற்குமா? தமிழில் பெயர் வைத்து கொள்ள முடியுமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? படம் போட்டு படம் காண்பித்து பிரயோசனமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!