மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி..? கனிமொழி அதிரடி

By vinoth kumarFirst Published Dec 28, 2018, 9:32 AM IST
Highlights

மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கெல்லாம் சிவப்பு கம்பளம் விரிக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், ஏற்கெனவே கட்சியில் செல்வாக்குடன் இருந்த தனது சொந்த அண்ணனான மு.க.அழகிரியை வலுக்கட்டாயமாக விலக்கி வைத்துள்ளார் ஸ்டாலின் இது குறித்து அதிரடி பதிலளித்துள்ளார் கனிமொழி.

தென்மாவட்ட அமைப்புச் செயலாளராக இருந்து கோலோச்சிய அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி கடும் முயற்சி எடுத்தார் அழகிரி. இதற்காக கருணாநிதியின் நினைவிடம் நோக்கி பேரணி, ஆதரவாளர்களுடன் ஆலோசனை என பல வகையில் ஈடுபட்டாலும் மொத்தமாக கதவை சாத்தி விட்டார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை திமுகவில் இணைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அமமுகவில் இருந்து வந்த செந்தில் பாலாஜி 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழியிடம், திமுகவில் இணைய வேண்டும் என்று நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் அழகிரி இன்னும் சேர்த்துக்கொள்ளப்படாமலேயே இருக்கிறாரே, என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “யார் கட்சியில் சேர வேண்டும், யார் கட்சியில் சேரக் கூடாது என்கிற முடிவைக் கட்சியின் மூத்த தலைவர்கள்தான் எடுக்க வேண்டும்” என்று பதிலளித்து நழுவிட்டார் கனிமொழி.

click me!