அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செல்லுமா? மார்ச் 20 க்குள் முடிவு....

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செல்லுமா? மார்ச் 20 க்குள் முடிவு....

சுருக்கம்

Will AIADMK general secretary Shashikala appointment? The results from the March 20

சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது குறித்து மார்ச் 20 க்குள் முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பதவியேற்றனர்.

பின்னர், முதலமைச்சராக பொறுப்பேற்க சசிகலா நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் கொதித்தெழுந்த ஓ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியின் முன்பு அமர்ந்து எழுந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது சசிகலாவுக்கு எதிராக பல குற்றசாட்டுகளை முன் வைத்தார். அதையடுத்து பல கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், சசிகலா ஒ.பி.எஸ்ஸிடம் ஐக்கியமானவர்களை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒ.பி.எஸ் தரப்பினர், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது எனவும், அதிமுக சட்டவிதிகளை மாற்றி அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான விளக்கத்தை சசிகலா தேர்தல் ஆணையத்தில் அளித்தார்.

பின்னர், ஒ.பி.எஸ் தரப்பும் 61 பக்க மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இருதரப்பு கோரிக்கைகளையும் ஆராய்ந்த தேர்தல் ஆணையம் மார்ச் 20 க்குள் முடிவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதிமுக சட்ட விதிகள் படியே முடிவுகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay: தேம்பி அழ வேண்டாம்..! உதயநிதியின் ஒவ்வொரு கருத்துக்கும் தரமான பதிலடி கொடுத்த CM விஜய்..
AIADMK Split 2026: இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?