பெட்ரோல் விலை ரூ76… தண்ணீர் பாட்டில் விலை ரூ 22 … 180ML குவாட்டர் விலை ரூ 130 ! பால் விலையை மட்டும் உயர்த்தக் கூடாதா ? குமுறும் விவசாயிகள் !!

By Selvanayagam PFirst Published Aug 21, 2019, 9:19 AM IST
Highlights

பெட்ரோல், தண்ணீர், மது போன்றவற்றின்  விலையை உயர்த்தும்போது ஊமையாக இருக்கும் ஊடகங்களும், பொது மக்களும் பால் விலையை உயர்த்தும்போது மட்டும் ஏன் கொந்தளிக்கிறார்கள் என பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் விவசாயிகள்தான் பல வழிகளில் வயிற்றில் அடிக்கப்படுகிறார்கள் என அவர்கள் குமுறுகின்றனர்.
 

பால்விலை உயர்வு என அரசு அறிவித்ததும் மக்களை கொந்தளிக்க செய்யும் மாற்று கட்சி தலைவர்களே  ஊடகங்களே மற்றும்  மக்களே..! உங்களுக்கு பாலை உற்பத்தி செய்யும்  மாடு வளர்க்கும் விவசாயின் நிலைமை தெரியுமா ...... ?

சரி பால் கொள்முதல் விலை உங்களுக்கு தெரியுமா?  விற்பனை விலையை 6 ரூபாய் உயர்த்தி 45+6=51ரூபாய் என வெளிப்படையாக அறிவிக்கும் உங்களுக்கு . இது தான் கொள்முதல் விலை என அறிவிக்க முடியுமா?  

எங்களிடம் தற்போதைய பால் கொள்முதல் விலை வெறும் 23ரூபாய் மட்டுமே.. 1லிட்டர் தண்ணீர் சாதாரணமாக விலை 20 ரூபாய்,  குளிர்விக்கபட்ட பாட்டில் 22 ரூபாய். இப்போது சொல்லுங்கள் எங்களால் ஒரு லிட்டர்  பால் விற்று தண்ணீர் கூட வாங்க முடியாது. மாடு வளர்க்கும் எங்களால் பால் விலையை அதிகரிக்கவும் முடியாது.  !!!

2017 ஆம் ஆண்டு 1கிலோ புண்ணாக்கு 30 ரூபாய். வைக்கோல் ஒரு கட்டு 50 ரூபாய் . பருத்தி கொட்டை ஒரு கிலோ 45 ரூபாய். ஆனால் கடந்த  2017 ஆம் ஆண்டு பால் கொள்முதல் விலை 22 ரூபாய் மட்டுமே. இது 2017 – ல்.  

இப்போது  புண்ணாக்கு விலை தெரியுமா ? 55 ரூபாய். வைக்கோல் 1 கட்டு 270 ரூபாய். பருத்தி கொட்டை 60 ரூபாய். 2019 ஆண்டின் பால் கொள்முதல் விலை 24 ரூபாய் மட்டுமே எப்படி நாங்கள் மாடு வளர்த்து லாபம் சம்பாதிக்க முடியும் நீங்களே சொல்லுங்கள் என கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.. 

விவசாயிகளை மேலும் நசுக்கும் வியாபாரிகள் விற்பதோ கொள்ளை இலாபத்தில்.. இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் போது வாய் திறக்காத மக்கள் பால் விலையை எதிர்த்து பேசுவது மக்களின் முட்டாள் தனத்தை மேலும் உறுதிபடுத்துகிறது என்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

ஆமா.... விவசாயிடம்  75 கிலோ நெல் ஒரு மூடை 1100 ரூபாய் அப்படியானால் 1கிலோ 15 ரூபாய். என் விவசாயி தவிடு வாங்க கடைக்கு போனால் 1கிலோ தவிடு 18 ரூபாய் ஆம் நெல்லை விட கழிவான தவிடு விலை எப்படி அதிகரித்தது. பருத்தி பஞ்சுடன் விவசாயிடம் கொள்முதல் விலை வெறும் 43 ரூபாய் ஆனால் கழிவான பருத்தி கொட்டை 60 ரூபாய் . விவசாயிடம் இருந்தால் எந்த பொருளுக்கும் விலை இல்லை... இன்னும் புரியலயா?.?  

இலவசமாக ரேசன் கடையில் ஏன் அரிசி மட்டும் கொடுக்கபடுகிறது... ஏனென்றால் அதை விளைவிப்பவன் விவசாயி அவன் வயிற்றில் அடிக்கலாம். இதனால் நெல் விலை உயராது.  கட்சிகாரர்களின் சாராய தொழிற்சாலையில் இருந்து சாராயம் இலவசமாக கொடுக்கலாமே.. இப்படி கொடுத்தால் இவர்களின் வருவாய் பாதிக்கபடுமே... எல்லாவற்றிற்க்கும் விவசாயி வயிற்றில் அடிப்பதா? என கொந்தளிக்கின்றனர் விவசாயிகள்…. நியாயம்தானே ?

click me!