ரஜினியை கண்டு ஸ்டாலினுக்கு பயம்.. அதிமுகவும்- ரஜினி கட்சியும் திமுகவை கும்மியடிக்கப் போகிறோம். கேடிஆர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 7, 2020, 10:17 AM IST
Highlights

திமுக செய்த டார்ச்சரால் தான்சாதிக்பாட்சா, அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டனர். என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். பாரதிய ஜனதா அழுத்தம் கொடுத்ததனால்தான் ரஜினி கட்சி ஆரம்பித்தார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது

ரஜினி கட்சியும் அதிமுகவும் இணைந்து திமுகவை கும்மியடிக்க போகிறது என அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். இதனால் அதிமுகவும் ரஜினி துவங்கவுள்ள கட்சியும் கூட்டணி அமைக்க போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது, அதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுகவுக்கும்-திமுகவுக்கும் நேரடிப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளது தொடர்பான  அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் அதிமுக கூட்டணி கூட அமைக்கலாம் என கருத்து கூறியுள்ளார். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு அவர்கள் யார் யார் கூட்டணி என்பது குறித்தும் அல்லது தனித்து போட்டியா என்பதும் தெரியவரும். 

இந்நிலையில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அப்போது திமுகவை மிககடுமையாக சாடினார். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய கையாளாக இருக்கக்கூடிய  ஊழலில் நாயகன் ராஜாவை வைத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி யாரையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் கேவலமாக விமர்சனம் செய்யக்கூடிய போக்கை வன்மையாக கண்டிக்கிறேன், அந்த உணர்வோடு தான் நான் இப்போது பத்திரிக்கையாளர்களாகிய உங்களை அழைத்திருக்கிறேன். தமிழகத்தில் கடந்த 7 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில்,  ஸ்டாலின் பெரிதாக  என்ன செய்துவிட்டார், என ஸ்டாலினை கொச்சையான வார்த்தைகளால் தாக்கினார்.பேச்சை தொடர்ந்த அவர்,  திமுக ஆட்சி காலத்தில் நடந்த கொலை பட்டியல் சொத்துப் பட்டியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். 

சாதிக்பாட்சா சம்பவத்தில் என்ன நடந்தது, இப்போது சாதிக் பாட்சாவின் மனைவியையும் ஆள் வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள், திமுக செய்த டார்ச்சரால் தான் சாதிக்பாட்சா, அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டனர். என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். பாரதிய ஜனதா அழுத்தம் கொடுத்ததனால்தான் ரஜினி கட்சி ஆரம்பித்தார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுயமாக சிந்திக்க கூடியவர், ரஜினிகாந்த் அரசியலில் பாஜக பின்னணியில் இருந்தால் என்ன.? முன்னிலையில் இருந்தால் என்ன.?  திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு பயப்படுகிறார். மொத்தத்தில் அதிமுகவும், ரஜினி ஆரம்பிக்கும் கட்சியும் ஒட்டுமொத்தமாக திமுகவை  கும்மி அடிக்க போகிறோம். திமுகவை படுதோல்வி அடையச் செய்வதே அதிமுகவின் ஒரே நோக்கம் என்றார்.
 

click me!