இறைவனை வழிபடும் இடத்தில் சாதி எதற்கு... மத போதகர் செல்வராணிக்கு எதிராக கொந்தளித்த சரத்குமார்..

By Ezhilarasan BabuFirst Published Nov 26, 2021, 6:54 PM IST
Highlights

எந்தவொரு சமூகத்தையும், சமுதாயத்தையும் இழிவுபடுத்தி பேசுவது கண்டனத்திற்குரியது. மதவழிபாட்டு தலத்தில் இறைவனை வழிபடும்போது, பிற மதத்தையோ, இனத்தையோ, மொழிகளையோ சாடுவது ஏற்புடையதல்ல. நவீன காலத்தில், பேசுவதற்கு முன்பாக, ஆழமாக சிந்தித்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். 

மதவழிபாட்டு தலத்தில் இறைவனை வழிபடும்போது, பிற மதத்தையோ, இனத்தையோ, மொழிகளையோ சாடுவது ஏற்புடையதல்ல என நாடார் சமூகத்தை இழிவாக  பேசிய மத போதகருக்கு எதிராக அகில இந்திய  சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா. சரத்குமார் கண்டனம்

தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயத்தில், கடந்த 21.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்ற மத போதனை கூட்டத்தின் போது, திருமதி.பியூலா செல்வராணி என்பவர், நாடார் சமூகத்தை இழிவுபடுத்தி பேசியிருப்பது தவறு, எந்தவொரு சமூகத்தையும், சமுதாயத்தையும் இழிவுபடுத்தி பேசுவது கண்டனத்திற்குரியது. 

மதவழிபாட்டு தலத்தில் இறைவனை வழிபடும்போது, பிற மதத்தையோ, இனத்தையோ, மொழிகளையோ சாடுவது ஏற்புடையதல்ல. நவீன காலத்தில், பேசுவதற்கு முன்பாக, ஆழமாக சிந்தித்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். எந்தவொரு விதத்திலும், உதாரணத்திற்காக கூட, மதம், இனம், மொழி சார்ந்து கருத்தை பதிவு செய்து, பிறர் மனதை புண்படுத்துவது தவறு. பேசுவதற்கு முன்பாக சிந்தித்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், மோதல்களையும், சிக்கல்களையும் தவிர்க்கலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு,  பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகளை தவிர்த்திட சம்பந்தப்பட்ட அமைப்பினர் அறிவுறுத்த  கேட்டுக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதே காரணத்திற்காக வணிகர்கள் மதபோதகர் பியூலா செல்வராணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா: தமிழகம் முழுவதும் தற்போது வணிகர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில்  சொல்ல கூடாத, சொல்ல முடியாத வார்த்தைகளை மதபோதகம் செய்யும்போது மதபோதகர் பியூலா செல்வராணி வணிகர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். பெண்களை சகோதரிகளாகவும் தாய்மார்கள் ஆகவும் வணிகர்கள் நினைத்து காலம் காலமாக வணிகம் செய்து வருகிறோம். டிஜிபியை சந்தித்து அவர் இனிமேல் மதபோதகம் செய்யக்கூடாது என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். 

இதுகுறித்து நாளை அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர்களிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட உள்ளது. புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இனி இதுபோன்று எந்த ஒரு சமூகத்தினரையும் துறையை சார்ந்தவர்களையும் அவதூராக பேசாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்ததாக அவர் தெரிவித்தார் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

click me!