தமிழிசையின் தமிழக பிஜேபி தலைவர் பதவி பறிப்பு!! விரைவில் பதவியேற்கும் புதிய தலைவர் யார்?

By sathish kFirst Published May 24, 2019, 4:51 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும், புதிய தலைவராக நிர்மலா சீதாராமன், ஹெச் ராஜா மற்றும் சிபி ராதாகிருஷ்ணன் புதிய தலைவர் பதவிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும், புதிய தலைவராக நிர்மலா சீதாராமன், ஹெச் ராஜா மற்றும் சிபி ராதாகிருஷ்ணன் புதிய தலைவர் பதவிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க பாஜக மிகப்பெரிய வெற்றியை சுவைத்து இருக்கிறது பிஜேபி. பிஜேபியே நினைக்காத அளவிற்கு அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. நாடு முழுக்க பிஜேபி மட்டும் தனியாக 303 இடங்களில் ஜெயித்துள்ளது. மொத்தமாக பிஜேபி கூட்டணி 363 இடங்களில் வென்று அபார சாதனை படைத்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் பிஜேபி கூட்டணி பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. தமிழகத்தில் பிஜேபி போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, பிஜேபியின் கூட்டணியான அதிமுக, பாமக மற்றும் தேமுதிக என அனைத்து கட்சிகளும் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

மிக முக்கியமாக தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை தான் போட்டியிட்ட தூத்துக்குடியில் மோசமான தோல்வியை தழுவி இருக்கிறார். இதனால் தமிழக பிஜேபி  தலைமை விரைவில் மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக பிஜேபி தலைவர் தமிழிசையின் பதவிக் கால முடிந்து, அது நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த நிலையில் மீண்டும் அவர் பதவியை நீட்டிக்கும் எண்ணத்தில் பிஜேபி தலைமை இல்லை என்கிறார்கள். 

இந்தமுறை, நிர்மலா சீதாராமனுக்கு பாஜக கட்சி அமைச்சர் பொறுப்பு வழங்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ரபேல் வழக்கில் சிக்கியதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கட்சி பொறுப்பை கொடுக்க பிஜேபி திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த முறை அவருக்கு தமிழக பிஜேபி தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே சமயம் தமிழக பிஜேபியின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பதவி காலியாகி இருப்பதால், அவருக்கும் பிஜேபியில் ஏதாவது பொறுப்பு கொடுப்பார்கள் என்று சொல்கிறார்கள். இன்னும் நயினார் நாகேந்திரன், சிபி ராதாகிருஷ்ணன். எச். ராஜா உள்ளிட்ட தலைவர்களும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

click me!