முதல்வர் வேட்பாளர் யார்? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.பி.முனுசாமி..!

By vinoth kumarFirst Published Aug 13, 2020, 3:46 PM IST
Highlights

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சர்களும், ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி;- தேர்தல் பணியைப் பற்றி ஆலோசிக்க இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்குத் துணையாக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளார். அமைச்சர்கள் செயல்படுகின்றனர். இன்று கொரோனா பேரிடர் சூழ்ந்த இக்கட்டான நிலையில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாகச் செயல்படுகிறது. 

முதல்வர் தலைமையில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அது ஆட்சிப்பணி. கட்சிப் பணி குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். முதல்வர் வேட்பாளர் யார் என நீங்கள் கேட்ட கேள்விக்கு உரிய காலத்தில் உரிய முடிவை உரிய முறையில் எடுப்போம். அதைக் கட்சி தலைமை நிர்வாகிகள் அறிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

click me!