சிக்க போகும் காஸ்ட்லி ஆடு யார்..? நிர்மலா தேவி விவகாரத்தில் பகீர் திருப்பம்...!

By thenmozhi gFirst Published Oct 18, 2018, 12:45 PM IST
Highlights

தமிழக உயர்கல்வித்துறையின் ‘தரத்தை’ தேசிய அளவில் சந்தி சிரிக்க வைத்திருக்கும் விவகாரம்தான் அருப்புக்கோட்டை கல்லூரி விவகாரம். கல்லூரி மாணவிகளை அத்துறையின் மேல்நிலை நபர்களுக்காக தவறான பாதையில் அழைத்துச் சென்றிட முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். 

தமிழக உயர்கல்வித்துறையின் ‘தரத்தை’ தேசிய அளவில் சந்தி சிரிக்க வைத்திருக்கும் விவகாரம்தான் அருப்புக்கோட்டை கல்லூரி விவகாரம். கல்லூரி மாணவிகளை அத்துறையின் மேல்நிலை நபர்களுக்காக தவறான பாதையில் அழைத்துச் சென்றிட முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். 

அதன் நீட்சியாக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ரிசர்ச் மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் அப்போதைக்கு வெடித்த பரபரப்பாக அடங்கிவிடவில்லை. அவ்வப்போது விஸ்வரூபமெடுப்பதும், பின் அடங்குவதுமாகவே இருக்கிறது. தமிழக கவர்னர் மீதே விமர்சனம், பத்திரிக்கை ஆசிரியர் மீது கைது பாய்ச்சல் என்று ஏகப்பட்ட வில்லங்கங்களுக்கு இந்த பிரச்னை மூல காரணமாகவும் இருந்து வருகிறது. 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போக்கில் மிகப்பெரிய நபர்கள் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிர்மலாதேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரோடு கைதும் நின்று, வழக்கும் முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 

இச்சூழலில் நிர்மலா உள்ளிட்ட மூவரின் மனுக்களும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றன. இது வழக்கின் உள் விவகாரம் பற்றி பெரிய சந்தேகத்தை கிளப்புகிறது விமர்சகர்களுக்கு. இது பற்றிப் பேசும் பொது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் “கொலைக் குற்றவாளிகளுக்கே ஜாமீன் கிடைத்து விடும் நிலையில், இவர்களை ஏன் இன்னமும் ஜெயிலில் வைத்திருக்கின்றனர்? கல்லூரி மாணவிகள் முருகனின் பெயரை குறிப்பிட்டார்களா? என்று நீதிபதி கேட்டதற்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் எந்த பதிலும் இல்லையே! ஆதாரமேயில்லாமல் முருகன், கருப்பசாமியை உள்ளே வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன? 

எப்படி நிர்மலாதேவி இப்படி மாணவிகளிடம் பாலியல் விஷயத்துக்காக பேசி சிக்கினாரோ அதேபோல் கோவையில் தனியார் ஹாஸ்டல் வார்டன் புனிதா என்பவர் ஹாஸ்டல் மாணவிகளை வர்புறுத்தி, பிரச்னையாகி, இறுதியில் ஹாஸ்டல் உரிமையாளரின் மர்ம சாவில் முடிந்தது. அந்த புனிதாவுக்கு கூட ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால் நிர்மலா உள்ளிட்டோரை வெளியே விட மறுப்பது ஏன்?” என்று தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படி எதுவும் சொல்ல தயாரில்லை. அருப்புக்கோட்டை கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலையின் கீழ் வருகிறது. அப்பல்கலையை சேர்ந்த அமைப்புகளும் இந்த ஜாமீன் மறுப்பு விவகாரத்துக்கு எதிராக சீறிக் கொண்டே உள்ளனர். ’யாரையோ காப்பாற்றவே இப்படி தொடர்ந்து இவர்ர்களின் ஜாமீன் மறுக்கப்படுகிறது. யார் அந்த காஸ்ட்லி ஆடு?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். 

யெஸ்! ஹூ இஸ் தட் காஸ்ட்லி ஷீப்?

click me!