டெல்லி அறிவாலயம் பொறுப்பாளர் யார்...? திமுக நிர்வாகிகளுக்குள் போட்டி...!

Published : Mar 24, 2022, 01:13 PM ISTUpdated : Mar 24, 2022, 01:20 PM IST
டெல்லி அறிவாலயம் பொறுப்பாளர் யார்...? திமுக நிர்வாகிகளுக்குள் போட்டி...!

சுருக்கம்

திமுகவின் டெல்லி அலுவலக கட்டிடமான அண்ணா அறிவாலயம் வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி திறக்கப்படவுள்ள  நிலையில் அந்த கட்டிடத்தின் பொறுப்பாளர் யார் என்பதில் திமுக நிர்வாகிகளுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அண்ணா அறிவாலயம்

டெல்லியில் தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இந்த கட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே திமுகவிற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அறிவாலயம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின்,பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நல திட்டங்கள் தொடர்பாக மனு அளித்தார். அப்போது டெல்லி அறிவாலய கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டு பணியை துரிதபடுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஜூலை மாதம் டெல்லி சென்ற முதலமைச்சர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தை திறந்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்போதும்   தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டு வரும் டெல்லி அறிவாலயத்தை பார்வையிட்டார். அப்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற 2 ஆம் தேதி டெல்லி அறிவாலய கட்டிடம் திறக்கப்படவுள்ளது. 8  ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 மாடி கட்டிடங்களை கொண்ட டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி பெயரில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான நூல்களை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அறிவாலய நிர்வாகி யார்?

இந்த டெல்லி அண்ணா அறிவாலய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி பொறுப்பு தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மற்றும் கம்யூனிஸ் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  அப்போது அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது  டெல்லி அறிவாலயம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள  நிலையில் அதன் பொறுப்பாளர்  யார் என்ற கேள்வியானது எழுந்துள்ளது. தற்போது  மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக சார்பாக உறுப்பினர்களாக உள்ள கனிமொழி,ஆ.ராசா, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆ.ராசா பெயரே முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?