சரக்கு மிடுக்கு திருமா எப்போ கட்சியை களைப்பீங்க..? அப்பன் பரமசிவனை அழைக்கும் நித்யானந்தா..!

Published : May 26, 2020, 10:30 AM IST
சரக்கு மிடுக்கு திருமா எப்போ கட்சியை களைப்பீங்க..? அப்பன் பரமசிவனை அழைக்கும் நித்யானந்தா..!

சுருக்கம்

எழுச்சி தமிழர் அரசியல் எழுச்சி இழந்ததால் பைத்தியமாக மாறி விட்டாரா? நலம் பெற என் அப்பன் பரமசிவனின் பாதங்களை வணங்குகிறேன்’’என நித்யானந்தாவின் கைலாஷ் விமர்சித்துள்ளது. 

எழுச்சி தமிழர் அரசியல் எழுச்சி இழந்ததால் பைத்தியமாக மாறி விட்டாரா? நலம் பெற என் அப்பன் பரமசிவனின் பாதங்களை வணங்குகிறேன்’’என நித்யானந்தாவின் கைலாஷ் விமர்சித்துள்ளது. 

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த டாக்டர்.கிருபாநிதி தன்னை சாதிஅடிப்படையில்  அவமதித்தார்கள் என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டினாரே. 2003-ல் மத்தியபிரதேசத்தில் அவர்கையைப் பிடித்து முறுக்கி சாதிப்பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதாக கூறினாரே. அவர்சொன்னது பொய்யா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார்.

 

அதற்கு பதிலளித்துள்ள நித்யானந்தாவின் பி.எம்.ஓ கைலாஷ் ட்விட்டர் பக்கத்தில், ‘’எழுச்சி தமிழர் மீது எனக்கு கொஞ்சம் மரியாதை இருந்தது. அது இந்த 17 வது வெற்றிகரமான முட்டு கொடுத்தலை பார்த்ததும் போய் விட்டது. சரக்கு மிடுக்கு அண்ணன் எப்போ சார் கட்சிய களைப்பீங்க. ஒரு வேளை எழுச்சி தமிழர் அரசியல் எழுச்சி இழந்ததால் பைத்தியமாக மாறி விட்டாரா? நலம் பெற என் அப்பன் பரமசிவனின் பாதங்களை வணங்குகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

பஞ்சமி நிலங்களை மீட்பதற்காகக எழுச்சி தமிழர் நடத்திய போராட்டங்கள் என்ன? திமுக வில் இருந்தபோது எடுத்த நடவடிக்கை என்ன? இதையெல்லாம் பிஜேபி யிடம் கேட்கும் நீங்கள் அவர்களோடு இணைந்து தேர்தலை சந்திக்க தயாரா? இல்லையெனில் கட்சியை கலைத்து விடுங்கள், பிஜேபி அனைத்தையும் செய்யும் தலித்துகள் நலம் பெறுவர்’’எனவும் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!