அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது..? சொன்னப்படி நடக்குமா அதிமுக?

Published : Jun 15, 2019, 08:39 AM IST
அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது..? சொன்னப்படி நடக்குமா அதிமுக?

சுருக்கம்

அதிமுகவின் பொதுக்குழுவை 2019 ஜூன் இறுதிக்குள்  நடத்தி முடித்துவிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மாதம் இறுதிக்குள் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். 

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இந்த மாத இறுதிக்குள் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் இறுதியில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2016 டிசம்பர் இறுதியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவால் அதிமுகவில் இரு அணிகள் இயங்கிவந்தன. இதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கிவைக்கப்பட்டது. இதற்கிடையே சசிகலா - தினகரன் அணியில் செயல்பட்டுவந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை கட்சியிலிருந்து ஓரங்கட்டினார். இதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஒ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து அதிமுகவை மீட்டெடுத்தனர். அதனையொட்டி 2017 செப்டம்பரில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


அந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைப் பதவிகள் ஏற்படுத்தி, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. மாறாக, பொதுக்குழு கூட்டம் நடத்த கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக  தலைமை கடிதம் எழுதியது. கஜா புயல் நிவாரணப் பணிகளை காரணம் காட்டி பொதுக்குழுவை அதிமுக ஒத்தி வைத்தது.
அந்தக் கடிதத்தில், அதிமுகவின் பொதுக்குழுவை 2019 ஜூன் இறுதிக்குள்  நடத்தி முடித்துவிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மாதம் இறுதிக்குள் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் ஆகஸ்ட்டில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூன் இறுதிக்குள் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!