ஏசப்பாவை நோக்கி நாங்கள் நகர்வதில் என்ன தவறு இருக்கிறது..? முழுசா மாறிப்போன திருமா வீடியோ..!

By Thiraviaraj RMFirst Published Nov 20, 2019, 3:03 PM IST
Highlights


இந்து கோயில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவன் ஏசப்பாவை நோக்கி நாங்கள் செல்வதில் என்ன தவறு இருக்கிறது என பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இந்து கோயில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவன் ஏசப்பாவை நோக்கி நாங்கள் செல்வதில் என்ன தவறு இருக்கிறது என பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

திருமாவளவன் கோவில்களை பற்றி இழிவாக பேசிய விவகாரம் இன்னும் அடங்கவில்லை. இந்தப்பேச்சை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப்போல அவர் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

 பாஜக சார்பில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் திருமாவளனவ், ‘’எங்களை குறிவைப்பது ஏன் என்றால் எங்கள் மக்களை அதிகார வலிமைப்படுத்த வேண்டும் என்பது அல்ல. பெரும்பாலும் தலித் மக்களும் பழங்குடியின மக்களும் தான் இந்து மதத்தை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.  இது அவர்களை அச்சுறுத்துகிறது. இந்து மதத்தை பலவீனப்படுத்தும் வகையில் இங்கே மதமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

நாள்தோறும் மக்கள் அவர்களாகவே ஏசப்பாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்? சிவன் காப்பாற்றவில்லை, விஷ்ணு காப்பாற்றவில்லை, மதுரை ஈனாட்சி காப்பாற்றவில்லை... எங்கள் குடிசைகளை கொழுத்துகிற நேரத்தில், எங்களை தாக்குகிற நேரத்தில் எங்களுக்கு ஆதரவாக இல்லை என்கிற நிலையிலே ஏசப்பாவை நோக்கி நகர்வதில் என்ன தவறு இருக்கிறது?’’என மதமாற்றம் செய்யும் நோக்கில் அவரது பேச்சு அமைந்துள்ளது. 

ஜனாதிபதி பதவிக்கு தலித்தை முன்மொழியாமல் ஓடிய , ஒரு தலித் துணை முதல்வர் பதவியாவது முதலாளி நிர்பந்திக்க திராணி உள்ளதா?

காஷ்மீரில் தலித்களுக்கு நடந்த அநீதிக்கு ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவரின் தலித் காவலன் வேடம் வெறும் சாதிமத அரசியலின் எச்சம். pic.twitter.com/1whU2Ct01C

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

 

click me!