ரயில்வே டிக்கெட்டில் 14 ஆயிரம் பேர் பேசும் சம்ஸ்கிருத சொல் எதுக்கு.? தருமபுரி திமுக எம்.பி. ஆவேசம்.!

Published : Mar 19, 2022, 09:13 AM IST
ரயில்வே டிக்கெட்டில் 14 ஆயிரம் பேர் பேசும் சம்ஸ்கிருத சொல் எதுக்கு.? தருமபுரி திமுக எம்.பி. ஆவேசம்.!

சுருக்கம்

ஐ.ஆர்.சி.டி.சி.யால் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டில் ‘திவ்யாங்’ என்ற என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்தச் சொல் தொடர்பாக மக்களவை பூஜ்ய நேரத்தில் தருமபுரி திமுக எம்.பி.யான டாக்டர் செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். 

‘ரயில்வே முன்பதிவு டிக்கெட்டில் மாற்றுத்திறனாளிகளை ‘திவ்யாங்’ எனும் சம்ஸ்கிருதச் சொல்லுக்குப் பதிலாக தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மாற்றி எழுத வேண்டும்’ என்று தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.

ஐ.ஆர்.சி.டி.சி.யால் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டில் ‘திவ்யாங்’ என்ற என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்தச் சொல் தொடர்பாக மக்களவை பூஜ்ய நேரத்தில் தருமபுரி திமுக எம்.பி.யான டாக்டர் செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், “நமது இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி முன்பதிவு இணைத்தில் ’திவ்யாங்’ என்ற ஒரு வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த சொல், ஐஆர்சிடிசியில் மாற்றுத்திறனாளிகளை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ’திவ்யாங்’ என்ற இந்தச் சொல் சம்ஸ்கிருத மொழி ஆகும். இந்த சம்ஸ்கிருத மொழியை வெறும் 14 ஆயிரம் மக்கள் மட்டுமே பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறார்கள்.

வெறும் சொற்ப அளவிலான மக்கள் மட்டுமே பேசும் இந்த சம்ஸ்கிருத மொழியை மத்திய ரயில் துறையில் பயன்படுத்துவது சரியா? இதைத்தான் நான் இந்த அரசிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். மக்களவை சபாநாயகர் மூலமாக மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். மத்திய ரயில்வே துறையிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துக்கூறி திவ்யாங் என்ற சம்ஸ்கிருதச் சொல்லை, மாற்ற உத்தரவிட வேண்டும். இந்தச் சொல்லை, ஆங்கில சொல்லான ’Physically Challenged’ என்று மாற்ற வேண்டும் அல்லது அரசியலமைப்பின் அட்டவணைப் பட்டியலில் இடம்பெற்ற தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் மாற்றியமைக்க வேண்டும்” என்று செந்தில் குமார் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay : திமுகவை சிக்க வைக்கும் 3 ஃபைல்ஸ்? சட்டசபையில் விஜய் பேசியது என்ன?
TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?