தலைவராக ஏற்க தயார் என சொல்லக் காரணம் என்ன? என்னதான் செய்தார் ஸ்டாலின்?

Published : Aug 30, 2018, 02:13 PM ISTUpdated : Sep 09, 2018, 07:22 PM IST
தலைவராக ஏற்க தயார் என சொல்லக் காரணம் என்ன? என்னதான் செய்தார் ஸ்டாலின்?

சுருக்கம்

அழகிரியின் ப்ளான்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கி, அஞ்சா நெஞ்சன் வாயாலேயே தன்னை தலைவராக ஏற்கத் தயார் எனச் சொல்ல வைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுகவில் பிளவு என்று ஒன்று ஏற்பட்டால் அதற்கு காரணம் அழகிரியாக மட்டுமே இருக்க முடியும் என்பது அவரது பேச்சின் மூலம் அனைவருக்கும் வெளிச்சமாகி இருந்தது. வரும் செப்டம்பர் 5 அன்று அவர் நடத்த உள்ள இரங்கல் ஊர்வலம் தான் அடுத்து திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கவே போகிறது என்று ஒரு கருத்தும் தற்போது அரசியல் வட்டாரத்தில் நிலவி இருக்கிறது. ஆனால் இந்த கருத்துக்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கி, அஞ்சா நெஞ்சன் வாயாலேயே தன்னை தலைவராக ஏற்கத் தயார் எனச் சொல்ல வைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

 ஒருவேளை அழகிரி முன்னரே கூறியது போல கழகத்தின் விசுவாசிகள் யார் யார் அவர் பக்கம் இருக்கின்றனர் என்பதை ரகசியமாக அறிந்து கொள்ள முற்பட்ட ஸ்டாலின் அடுத்தடுத்து எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தான் இப்போது ஹைலைட். ஏற்கானவே இந்த ஊர்வலம் குறித்து சவாலாக பெசிய அழகிரி தற்போது அவர் சொன்ன மாதிரியே ஒர் லட்சம் பேரை ஊர்வலத்தில் கலந்துகொள்ள வைப்பதற்கு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரமே தெரிவித்திருக்கிறது.

அதிலும் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியை பார்த்த பிறகு அழகிரி கொஞ்சம் கூடுதலாகவே அப்சட் ஆகி இருக்கிறார். ஸ்டாலின் திமுக  தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு அவருக்கு வாழ்த்துரை வழங்க 18 பேரை தேர்வு செய்திருக்கிறார். இந்த லிஸ்டில் புதிதாக பலரின் பெயர்கள் இருந்திருக்கின்றன. இந்த லிஸ்டை பார்த்து திமுகவினரே அசந்து போயிருக்கின்றனர். 

இத்தனை காலமும் ஸ்டாலின் யாரிடம் எல்லாம் இருந்து விலகி இருந்தாரோ, யாருக்கெல்லாம் அதிகம் முக்கியத்துவம் தரவில்லையோ அவர்கள் அனைவரையும் இந்த விழாவின் போது சரி கட்டி இருக்கிறார் ஸ்டாலின். அழகிரி ஏற்கனவே ஸ்டாலினுக்கும் யாருக்கும் இடையே எல்லாம் புகைச்சல் இருக்கிறதோ அவர்களை தான் தன் பக்கம் சேர்த்து கொள்ள முயன்று கொண்டிருந்தார். 

ஆனால் ஸ்டாலின் தேர்வு செய்த இந்த 18 பேர் லிஸ்டை பார்த்த பிறகு தன் முயற்சி இனி வீண் என்பது போல நொந்து போயிருக்கிறார் அழகிரி.இந்த பட்டியலில் கும்மிடிப்பூண்டி வேணுவின் பெயரும் இடம் பெற்றிருந்திருக்கிறது. வேணு கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். எதிலும் வெளிப்படையாக பேசும் இவர் கலைஞரிடமே பலமுறை உரிமையுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். 

இதனாலேயே இவரை ஒதுக்க தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். வேணுவிற்கு கடைசியில் 15 ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் பதவி கூட கொடுக்காமல் , துர்கா ஸ்டாலினின் தோழியின் கணவருக்கு அந்த பதவியை கொடுத்து கடுப்பேற்றி இருக்கிறார் ஸ்டாலின். அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்க ஸ்டாலினே வழி செய்திருக்கிறார். 

இவ்வாறு  வாதாடும் திமுகவினரை அவ்வப்போது தட்டி வைத்த ஸ்டாலின் இம்முறை தன்னால் ஓரங்கட்டப்பட்ட அனைவருக்குமே முன்னுரிமை அளித்திருக்கிறார். ஏ.கே.எஸ்.விஜயன், பழனிமாணிக்கம் போன்றோரிடம் தான் அழகிரி தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் ஆனால் அவரின் வியூகங்களை எல்லாம் பொதுக்குழுவில் வைத்து உடைத்திருக்கிறார் ஸ்டாலின். 

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம், கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும், கட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை. இதற்கு என் மகனே பதில் அளித்துவிட்டார். ஆனாலும் அவர்கள் இதை பற்றி யோசிக்கவில்லை என  தானாக வந்து சமாதானக் கோடியை பரக்கவிட்டுள்ளார். என்னதான் அஞ்சா நெஞ்சன் களப்பணி நாயகன், திருமங்கலம் ஃபார்முலா தயாரித்த கிங் என அழகிரியை புகழ்ந்தாலும், ஸ்டாலினின் வியுகத்திக்கு முன்னாள் தவிடு பொடியானது. கலைஞரின் கூடவே இருந்து இந்த அளவிற்கு கூட சாணக்கியத்தனம் கற்றிராவிட்டால் எப்படி?

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்