விஜய்க்கு என்னதான் ஆச்சு? அந்த நடிகையின் நம்பருக்காக மிட்நைட்டில் டென்ஷனாகியிருக்கிறார்.

By Vishnu PriyaFirst Published Oct 14, 2019, 5:37 PM IST
Highlights

சீன அதிபரின் வருகையை ஒட்டி சென்னை மற்றும் மாமல்லபுரம் சுத்தம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு இணையாக காட்சி அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

விஜய்க்கு என்னதான் ஆச்சு? அந்த நடிகையின் நம்பருக்காக மிட்நைட்டில் டென்ஷனாகியிருக்கிறார். 

 *    உலகத் தலைவர்களின் வருகையை, நாம் உலக விஷயமாக பார்க்க வேண்டுமே தவிர அதை உள்ளூர் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது! என்பதை ஆளுங்கட்சியினர் உணர வேண்டும். கடற்கரையை மோடி சுத்தம் செய்ததை நான் குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் உலக தலைவர்களின் வருகைக்காக அத்தனை பாதுகாப்பு இருந்த கடற்கரையில் அத்தனை குப்பைகளைப் போட்டது யார்? அதை மோடி கண்டுபிடிக்க வேண்டும். 
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*    சீன அதிபரின் வருகையை ஒட்டி சென்னை மற்றும் மாமல்லபுரம் சுத்தம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு இணையாக காட்சி அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குறுகிய காலத்தில் இத்தகைய சுத்தம் சாத்தியமென்றால், இதை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அமல்படுத்த வேண்டும். மக்களும், அதற்கு ஒத்துழைக்க வேண்டும். 
-    விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்)


*    நாங்குநேரியில் பெறப்போகும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வெற்றி, அடுத்து வரும் பொதுத்தேர்தலுக்கு அஸ்திவாரமாக அமையும். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்ய பா.ஜ.வில் ஆட்கள் இல்லை. அப்படியே அவர்கள் வந்தாலும், தமிழகத்தில் பா.ஜ.வுக்கு வாக்கு வங்கி இல்லை. 
-    திருநாவுக்கரசர் (எம்.பி.)

*    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி வந்தார். ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும், அபிஷேக சேவையில் பங்கேற்றார். அவருக்கும், அவரோடு வந்தவர்களுக்கும் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏழு மலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சேஷ வஸ்திரத்தை, துர்காவுக்கு அளித்து, கோவில் அர்ச்சகர்கள் ஆசி வழங்கினர். 
-    பத்திரிக்கை செய்தி. 

*    தமிழ் மற்றும் தமிழர் பெருமைகள் குறித்து மோடி பேசி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழ் மொழிக்கு, மோடி அரசு செய்தது என்ன? வாயளவில் பேசுவதைக் காட்டிலும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். அதன் பின் இந்த மொழியின் பெருமையை அவர் பேசினால் சிறப்பாக இருக்கும். 
-    வேல்முருகன் (த.வா.க. தலைவர்)

*    புதுவையில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். ரவுடிகள் ராஜ்ஜியத்தை அடக்கியுள்ளோம். புதுவையை அமைதி பூங்காவாக மாற்றி, மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்துள்ளோம். இதெல்லாம் தெரியாமல் ரெங்கசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோசமாக விமர்சிக்கிறார்கள். 
-    நாராயணசாமி (புதுவை முதல்வர்)

*    கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பன்னீர்செல்வம், அக்கட்சி தலைமையின் கைப்பாவையாக இருந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அல்லது மாநில செயலாளரிடம் விவாதம் செய்துவிட்டு அவர் அறிக்கை விடலாம். தயாரா அவர்?
-     தாமரைக்கண்ணன் (பா.ம.க. நிர்வாகி)

*    தமிழகம் பாலைவனமாகிவிட கூடாது, பட்டினி பிரதேசமாகவும் ஆகிவிட கூடாது. தமிழர்களின் நலன் காக்க, விவசாயிகளின் நலன் காக்க, தி.மு.க. ஆட்சியானது இந்த மண்ணில் மலர வேண்டும். மக்கள் நலனுக்கு எதிரான அ.தி.மு.க. ஆட்சியானது தூக்கி எறியப்பட வேண்டும். 
- வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

*    தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். ஆனால் அவரே சீன அதிபர் வருகையை ஒட்டி, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறார். அதனால் அவரும் எங்களுடன் தான் இருக்கிறார். அ.தி.மு.க.வின் 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்தது தினகரன் மட்டுமல்ல, ஸ்டாலினும்தான். 
-    திண்டுக்கல் சீனிவாசன் (வனத்துறை அமைச்சர்)

*    ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த ‘கல்லிபாய்’ படத்தைப் பார்த்த பின், ஆலியாவின் நடிப்பை உடனடியாக பாராட்ட வேண்டும்! என துடித்தேன். ஹிந்தி இயக்குநர் கரண் ஜோகரிடம் ஆலியாவின் மொபைல் நம்பரை கேட்டேன். 
-    விஜய் தேவரகொண்டா (நடிகர்)

-    விஷ்ணுப்ரியா

click me!