ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் நடந்தது என்ன.?? அப்பல்லோ மருத்துவர் வாக்கு மூலம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 6, 2022, 4:08 PM IST
Highlights

விசாரணையை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ள ஆணையம் அதற்கான அறிக்கையை விரைவில் அரசிடம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் பல மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ்கார்டனில் பணியாற்றிய ஊழியர்கள் மேலும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ  நெறி முறைப்படியே சிகிச்சை வழங்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கூட அவரை சந்தித்ததாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

செல்வி ஜெயலலிதாவின் மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில் அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 150க்கும் அதிகமானோர் இடத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், மருத்துவ வல்லுனர்களை கொண்டு விசாரணை நடைபெறவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடுத்த வழக்கில் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

 

அதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு உறுதுணையாக அமைத்த நிலையில் நீதிமன்றம் விசாரணை ஆணையத்திற்கு தடையை நீக்கியது.  அதுமுதல் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மருத்துவர்கள் தமிழ் பழனி, செந்தில்குமார் உள்ளிட்டோர் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது, அப்பல்லோ மருத்துவர்களிடம் இன்றும், நாளையும் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம், விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மொத்தத்தில் 90 சதவீதம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.

விசாரணையை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ள ஆணையம் அதற்கான அறிக்கையை விரைவில் அரசிடம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் பல மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ்கார்டனில் பணியாற்றிய ஊழியர்கள் மேலும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் மறுவிசாரணையில் மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் இன்று ஆஜராகினர் அவர்களிடம் வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என அழைக்கப்பட்டதாகவும் அப்போது தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டதாகவும் பால் ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து வாக்குமூலம் அளித்த மருத்துவர் நரசிம்மன் டிசம்பர் 1- 2016 அன்று அதாவது ஜெயலிதா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக ஜெயலிதாவை சந்தித்ததாகவும் அப்போது அவர் நலமுடன் இருந்ததாகவும் கூறினார். 

 

click me!